மும்பை: பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்ட விதிமுறைகளை, இதன் 5 கிளை வங்கிளுக்கு அமலாக்கம் செய்யவதை எதிர்த்து ஜனவரி 8ஆம் தேதி (நாளை) வேலை நிறுத்தபோராட்டத்தில் பங்கேற்க வங்கி ஊழியர்களுக்கு அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய அரசு வங்கிகளுக்கு மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 8 ஆம் தேதி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம் 3 நாள் தொடர்ந்து வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் வழக்கம்போல் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் அதன் கிளைகளான ஸ்டேட் பாங்க் ஆஃ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதெராபாத், ஸ்டேட் வங்கி திருவாங்கூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃ பாட்டியாலா ஆகிய வங்கிகளுக்கும் அமலாக்கம் செய்யப்படுவது குறித்துத் தலைமை தொழிலாளர் ஆணையரிடம் கடந்த வாரம் AIBEA அமைப்பின் எதிர்ப்புகளைத் தெரிவித்தது.
இதற்கான பேச்சுவார்த்தையில் தோல்வியைச் சந்தித்த நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் AIBEA அமைப்பு அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டத்தின் மூலம் தனது கிளை வங்கி ஊழியர்களுக்குக் கூடுதல் வேலைப் பளு, கூடுதல் வேலைநேரம், அவுட்சேர்சிங் பணிகளை எனப் பலவற்றில் பதிப்புகள் உள்ளதாக AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்புதிய திட்டத்தை அமலாக்கம் செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், கிளை வங்கிகளுக்கு இத்திட்ட செயல்முறையை மாற்றி வடிவமைக்கும் கோரிகைகளைத் தலைமை தொழிலாளர் ஆணையர் மறுத்துள்ள நிலையில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முன்னேற்றத் திட்டம் IBA மற்றும் AIBEA அமைப்புகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளதாகவும் AIBEA அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications