விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனியாகப் பிரிக்கப்பட்ட பின், புதிய வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்காக ஆந்திர அரசு போராடி வந்த நிலையில், தனது விடா முயற்சி மற்றும் தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் தற்போது நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குரூப் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ராணுவ கப்பல் கட்டுமான தளம் அமைக்க அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தம்
விசாகபட்டினத்தில் கடந்த 3 நாட்களாக நடந்த சிஐஐ பார்ட்னர்ஷிப் சுமிட் மற்றும் சன்ரைல் ஏபி இன்வெஸ்ட்மென்ட் ஆகியவை இணைந்து நடத்திய முக்கியமான வர்த்தகச் சந்திப்பில் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திடத்தில் ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயடு ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ராம்பில்லி
இதுக்குறித்து அனில் அம்பானி கூறுகையில், ஆந்திர மாநிலம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணைந்து துவங்க உள்ள இப்புதிய தொழிற்சாலை, விசாகபட்டினத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்பில்லி பகுதியில் அமைய உள்ளது.
பிரிவு
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா பிரிவிற்குப் பின் ஆந்திராவில் செய்யப்பட்டு இருக்கும் மிகப்பெரிய முதலீடு இதுவே. ஆகையால் ரிலையன்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேச அரசின் வர்த்தக வளர்ச்சி குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இந்திய கப்பல் படை
இந்திய கப்பற்படை புதிய கப்பல் வாங்குவதற்காகவும், பழுது சரிபார்க்கவும் வருடத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாயைச் செலவு செய்கிறது. இந்நிலையில், அடுத்த 15 வருடத்தில் இத்துறையில் செலவிடப்படும் தொகையை 80 சதவீதம் வரையில் குறைக்கும் வரையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் கீழ் மத்திய அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.
இந்த வாய்ப்புகளைக் கவரவே ரிலையன்ஸ் நிறுவனம் முன்கூடியே 5000 கோடி ரூபாய் அளவில் மிகப்பெரிய முதலீட்டை ஆந்திராவில் செய்துள்ளது.
வேலையவாய்ப்புகள்
இப்புதிய தொழிற்சாலையின் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அனில் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மொத்த முதலீடு
இத்தொழிற்சாலையில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள அனில் அம்பானி, வரிவாக்க பணிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட வர 10,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் குழுமம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications