மும்பை: அனில் அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு அமைச்சகம் 5,500 கோடி ரூபாய் கோரியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை இந்தியாவில் 16 வட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்த தொலைத்தொடர்பு துறையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத துவக்கத்தில் அணுகியது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் அறிமுகச் செய்யத் திட்டமிட்டுள்ளதால் இந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, பல வருடங்களுக்குப் பின் தனது தம்பி அனில் அம்பானியுடன் மீண்டும் இணைய உள்ளார்.
டிரேடிங் மற்றும் ஷேரிங்
இதன் படி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 800 மெகா ஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை டிரேடிங் மற்றும் ஷேரிங் முறையில் பயன்படுத்த இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளது.
தாராளமயப்படுத்தவதற்கான கோரிக்கையை விசாரித்த தொலைத்தொடர்பு துறை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை அடுத்த ஒரு மாதத்திற்குள் 5,500 கோடி ரூபாய் செலுத்த அறிவித்துள்ளது.
20 வட்டங்கள்
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிடம் கோரியது 20 வட்டங்கள், ஆனால் இத்துறை வெறும் 16 வட்டங்களில் மட்டுமே தாராளமயப்படுத்த தற்போது அனுமதி அளித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் கோரப்பட்ட விலை அளவுகள் சந்தை விலைக்குக் குறைவாக உள்ளதால் இந்த 4 வட்டங்களில் அனுமதி அளிப்பது குறித்த முடிவுகளை எடுக்கத் தொலைத்தொடர்பு துறை டிராய் அமைப்பின் உதவியை நாடியுள்ளது.
ஜியோ நிறுவனம்
4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை அறிமுகம் செய்வதிலும், டிரேடிங் மற்றும் ஷேரிங் விவகாரத்தில் முக்கியக் கட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாகம் உள்ளது என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications