பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் 14.2 சதவீத லாப உயர்வில் 6,083 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
இக்காலாண்டில் சென்னையில் பெய்த கன மழையால் டிசிஎஸ் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது, எனவும் சரியான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியாத காரணத்தினால் கூடுதல் செலவானது, இதனால் லாப அளவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்த லாபம்
அக்டோபர்-டிசம்பர் வரையிலான 3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாப அளவு 6,083 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 5,328 கோடி ரூபாயாக இருந்தது.
2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் செயலாக்க லாப அளவுகள் 7,276 கோடி ரூபாயாக இருக்கிறது.
வருவாய்
மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாயின் அளவுகளைப் பார்க்கும் போது கடந்த நிதியாண்டை விடவும் 11.7 சதவீதம் அதிகமாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் அதாவது அக்டோபர்- டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 11.7 சதவீதம் உயர்ந்து 27,364 கோடி ரூபாயாக உள்ளது.
என்.சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் அனைத்துத் தொழிற்துறைகளும் 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் மந்தமான லாபத்தை மட்டுமே சந்தித்துள்ளது. இந்நிலையில் டிசிஸ் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவுகள் சென்னை மழை வெள்ளத்தால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
சந்தைகள்.. வர்த்தகம்..
மேலும் நிறுவனத்தின் வர்த்தகம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொடர்ந்து விரிவாக்கம் அடைந்து வரும் இவ்வேளையில், லத்தின் அமெரிக்காவில் புதிய வர்த்தகத்திற்கான ஸ்திரமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் துறை
இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகளில் 13.7 சதவீத டிஜிட்டல் துறையில் இருந்து பெறப்பட்டவை, இந்நிலையில் 2016ஆம் ஆண்டிலும் டிஜிட்டல் துறையைத் தலைமையானதாகக் கொண்டு செயல்பட டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.
ஈவுத்தொகை
இந்நிலையில் 1 ரூபாய் முக மதிப்புடைய டிசிஎஸ் நிறுவன பங்குதாரர்களுக்கு 5.50 ரூபாய் ஈவுத்தொகை அளிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications