டெல்லி: மத்திய அரசு இன்று ஓரே நாளில் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் காட்லியா ஹெல்த்கேர் நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடும் அடக்கம்.
காட்லியா ஹெல்த்கேர் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக QIB முறையில் நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் அன்னிய முதலீட்டு வாயிலாகச் சுமார் 5000 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இதற்கான ஒப்புதல்களையும் மத்திய அரசிடம் இருந்து இன்று பெற்றுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் டிசம்பர் 21ஆம் தேதி கூட்டத்தின் முடிவின் படி மத்திய அரசு அரசு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ரெசிபார்ம் மருந்து தயாரிப்பு நிறுவனம் முழுமையாக இந்திய நிறுவனமாக மாற நிட்டின் லைப்சைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் தனது பங்குகளை வாங்க சுமார் 1,050 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் பியூமெர்க் கோர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்த என்ஆர்ஐ மற்றும் ரெசிடென்ட் முதலீட்டாளர்கள் பங்குகளை முழுமையாகப் பியூமெர்க் கார்பரேஷன் நிறுவனத்திற்கு மாற்ற 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கும் மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications