பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் கணிப்புகளையும் தாண்டி 2 சதவீத லாபத்தைப் பெற்றுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான டிசிஎஸ், இதே காலகட்டத்தில் 14.2 சதவீத லாப உயர்வில் 6,083 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லாபமும்.. வருவாயும்..
2015ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 2 சதவீதம் அதிகரித்து 3,465 கோடியாகவும், வருவாய் 1.7 சதவீதம் உயர்ந்து 15,902 கோடி ரூபாயாகவும் உள்ளது.
2,407 மில்லியன் டாலர்
அதேபோல் டாலர் வருவாய் அளவுகளைப் பார்க்கும் போது வெறும் 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்து 2,407 மில்லியன் டாலரைப் பெற்றுள்ளது. கடந்த காலாண்டில் இதன் அளவுகள் 2,392 மில்லியன் டாலராக இருந்தது.
டாலர் வருவாய்
இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டாலர் வருவாய் அளவுகளின் கணிப்புகள் 10-12 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
லாபம், வருவாய், வர்த்தகத்தில் தொடர்ந்து உயர்வைக் காட்டினாலும், ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெறும் அளவுகள் மட்டுமே குறையவில்லை. 2015ஆம் ஆண்டின் 2வது காலாண்டை ஒப்பிடுகையில் 3வது காலாண்டில் அதன் அளவுகள் சிறப்பாக இருந்தாலும், சந்தையில் பிற நிறுவனங்களை ஒப்பிடும் போதும் இதன் அளவு கொஞ்சம் அதிகம் தான்.
18.1 அட்ரிஷன்
3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றத்தின் அளவுகள் 18.1 சதவீதமாக உள்ளது.
கணிப்புகள்
சிஎன்பிசி-டிவி18 கணிப்பின் படி இன்போசிஸ் இக்காலாண்டு லாப அளவுகள் 2.9 சதவீதம் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கணிப்புகளையும் தாண்டி இன்போசிஸ் தற்போது 2 சதவீத லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
பங்குச்சந்தை
இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியான சில நொடிகளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 4.80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications