பெங்களுரூ: ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய இன்றளவில் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், யூனிகான் இந்தியா வென்சர்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் தனது முதல் முதலீட்டை அறிவித்துள்ளது.
ஐஐடி கரக்பூர் மாணவர்கள் இணைந்து உருவாக்கப்பசட்ட ரோடெர் என்ற இன்டர்சிட்டி கேப்- புக்கிங் நிறுவனத்தில் யூனிகான் இந்தியா வென்சர்ஸ் முதல் முறையாக முதலீடு செய்து தனது பணியைச் செவ்வெனத் துவங்கியுள்ளது.
ரோடெர்
அபிஷேக் நெகி, ஆஷிஷ் ராஜ்புட் மற்றும் சித்தார்த் மாத்ரி ஆகியோர் இணைந்து உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் நகரங்கள் அடிப்படையிலான கேப் (Cab) புக்கிங் சேவையை அளிக்கிறது.
யூனிகான் இந்தியா வென்சர்ஸ்
இன்டர்சிட்டி கேப்- புக்கிங் துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. அதேபோல் பிற நிறுவனங்களைப் போல் அல்லமல்ல குறுகிய கால அறிவிப்பிலும் கேப் சேவையை அளிக்கிறது ரோடெர், மேலும் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்நிறுவனம் தனது சேவையை அளிப்பதால், வர்த்கத்திலும், வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என யூனிகான் இந்தியா வென்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டாளர் பாஸ்கர் மஞ்சுமாதர் தெரிவித்துள்ளார்.
கட்டண முறை
இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சிறப்பு என்றால் ஒரு பயணத்தில் ஒரு பக்க பயணத்திற்கான கட்டணத்தை மட்டுமே வசூல் செய்கிறது ரோடெர். உதாரணமாக டெல்லி முதல் ஆக்ரா வரை செல்ல சாதாரணமாகப் பிற நிறுவனங்களில் 6,000 ரூபாய் ஆகும். ஆனால் ரோடெர் நிறுவனத்தில் ஒரு பக்க பயணத்திற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்வதால் வெறும் 2,600 வரை மட்டுமே ரோடெர் பணம் வசூல் செய்கிறது.
வாடிக்கையாளர்
ஒரு பக்க பயணக் கட்டணத்திற்காக மட்டுமே இந்நிறுனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆரம்பக் காலத்தில் 5 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்தது.


Click it and Unblock the Notifications