14 மாத தொடர் சரிவில் மொத்த விலை பணவீக்கம்..!
டெல்லி: சர்வதேச சந்சையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் 14 மாத தொடர் சரிவாக டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 0.73 சதவீதத்தை எட்டியுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கான மொத்த விலை பணவீக்கத்திற்கான கணிப்புகளைப் பார்க்கும் போதும் இதன் அளவு 1.15% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாத்தில் பணவீக்கத்தின் அளவு 0.73 சதவீதமாக உள்ளது.

கடந்த வருடத்தை ஒப்பிடும் போது கச்சா எண்ணெய்கான் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு டிசம்பர் மாதத்தில் 9.15 சதவீதம் குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் உற்பத்தி பொருட்களின் விலை வரும் 1.36 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை நிலையைப் பார்க்கும் போதும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 8.17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நவம்பர் மாத்தில் 5.2 சதவீதமாக இருந்தது.


Click it and Unblock the Notifications