டெல்லி: மத்திய அரசு இந்திய விமானத் துறையை மேம்படுத்தும் விதமாக, 10 வருடங்களுக்கும் அதிமாக நடைமுறையில் இருக்கும் 5/20 விதியை ரத்துச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஒரு தரப்பு விமான நிறுவனங்கள் ஆதரவும் தெரிவித்தும், மற்றொரு தரப்பு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அப்படி இந்த 5/20 விதியில் என்ன இருக்கு... வாங்க பார்ப்போம்..
5/20 விதி
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் எந்த ஒரு நிறுவனமும் 5 வருடம் உள்நாட்டு விமானச் சேவை அளித்தும், நிறுவனத்தின் பெயரில் 20 விமானங்கள் இருந்தால் போதும் வெளிநாடுகளுக்குப் பயணிகள் விமானச் சேவையை அளிக்கலாம்.
5 வருட உள்நாட்டு விமானச் சேவை அனுபவம் மற்றும் 20 விமானங்கள் கொண்டு இருந்தால் போதும் மத்திய அரசு எளிமையான முறையில் பன்னாட்டு விமானச் சேவை அளிக்க ஒப்புதல் அளித்துவிடும்.
இதனை ரத்து செய்யவே மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இத்தகைய முடிவிற்கு விமான நிறுவனங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.
என்ன தான் பிரச்சனை
சந்தையில் ஏற்கனவே பன்னாட்டு விமானச் சேவையை அளித்தும் தனியார் நிறுவனங்களான இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காரணம்
சந்தையில் புதிதாகக் குதித்துள்ள விஸ்தாரா மற்றும் ஏர்ஏசியா ஆகிய நிறுவனங்கள் 5/20 விதியை ரத்து செய்வதன் மூலம் பன்னாட்டு விமானச் சேவையை அளிக்க இயலும்.
இதனால் தங்களுக்கு வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு இன்டிகோ, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
ஏர் இந்தியா
லாபத்தில் நிறுவனத்தை இயக்கக் கடுமையாகப் போராடி வரும் மத்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா-வும் மத்திய அரசின் 5/20 விதியை ரத்து முடிவை ஆதரித்துள்ளது.
மேலும் 5/20 விதியை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவிற்கு நாங்கள் எவ்விதமான மறுப்பு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று ஏர் இந்தியா நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு
ஏற்கனவே விமானப் போக்குவரத்துத் துறை 5/20 விதியை ரத்து செய்வதற்கான ஆணையைத் தயார் செய்து மத்திய அரசின் ஒப்புதல்களுக்குக்காக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு இருக்காது..
சமீபத்தில் மத்திய அரசும் ஏர் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கூட்டத்தில் 5/20 விதியை ரத்து செய்வதால் வர்த்தகம் மற்றும் பயணிகள் எண்ணிக்கைக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது என ஏர் இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications