13 மாத தொடர் சரிவில் ஏற்றுமதி.. சேவைத் துறையால் தப்பித்தது நடப்பு கணக்கு பற்றாக்குறை..!

மும்பை: இந்திய சந்தை கடந்த 13 மாதங்களாகத் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மிகப்பெரிய பாதிப்பு அடைந்துள்ளது.

2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தியாவில் ஏற்றுமதி அதிகளவில் குறைந்து தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கத் துவங்கின. இதன் எதிரொலியாக நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகளவில் பாதித்துள்ளது.

13 மாத தொடர் சரிவில் ஏற்றுமதி.. சேவைத் துறையால் தப்பித்தது நடப்பு கணக்கு பற்றாக்குறை..!

2015ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் தங்கத்தின் இறக்குமதி சுமார் 179 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கவே மத்திய அரசு தங்க முதலீட்டுத் திட்டத்தை அறிவித்தது.

2015ஆம் ஆண்டில் ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சேவைத்துறையின் ஏற்றுமதி அளவு 54.5 சதவீதம் வரை உயர்ந்து ஏற்றுமதி- இறக்குமதி மத்தியிலான வித்தியாசத்தை அதிகளவில் குறைத்தது.

அதேபோல் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் விற்பனையாளர்களின் ஏற்றுமதி அளவுகள் 18.06 சதவீதம் சரிந்து 196 பில்லியன் டாலராகக் குறைந்தது. கடந்த வருடம் இதன் அளவு 239.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 30 பொருட்களில் 15 பொருட்கள் 14.75 சதவீதம் அளவிலான ஏற்றுமதி சரிவை எட்டியுள்ளது.

சேவைத்துறையின் 50 சதவீத ஏற்றுமதி உயர்வால் 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 8.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 10.9 பில்லியனாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+