தவறுதலாகப் போலி ரூ.1,000 நோட்டுகளை அச்சடித்த ரிசர்வ் வங்கி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி தவறுதலாக 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துவிட்டது. இவை அனைத்தும் 5AG, 3AP வரிசையில் உள்ளது.

இது அதிகாரப்பூர்வமாகச் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இதனை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வணிக வங்கிகளுக்கு அதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

வெள்ளி நூல்

வெள்ளி நூல்

இந்திய ரூபாய் நோட்டுகளின் முக்கியப் பாதுகாப்பு அம்சமாகக் கருதப்படுவது வெள்ளி நூல் தான். சாமானிய மக்கள் வரை அனைவரும் இதனைக் கொண்டு தான் கல்ல நோட்டிற்கும், அரசாங்க நோட்டிற்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கின்றனர். ஏனெனில் இது கண்களுக்கு எளிதாகப் புலப்படுபவை.

இத்தகைய வெள்ளி நூல் இல்லாமல் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்துள்ளது.

புழக்கத்தில் 10,000 கோடி ரூபாய்

புழக்கத்தில் 10,000 கோடி ரூபாய்

இந்நிலையில் வெள்ளி நூல் இல்லாமல் அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் 5AG, 3AP வரிசையில் உள்ளது. இதில் 20,000 கோடி ரூபாய் ஆர்பிஐ-யிடமும், 10,000 கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

5AG, 3AP வரிசை

5AG, 3AP வரிசை

தற்போது ஆர்பிஐ அறிவித்துள்ள படி 5AG, 3AP வரிசையில் உள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் யாவும் செல்லத்தக்கது அல்ல என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும், மத்திய பிரதேசம், ஹோஷன்காபாத்-இல் உள்ள Security Printing and Minting கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, பின்பு நாசிக்-இல் உள்ள ஆர்பிஐ அச்சகத்திற்குக் கொண்டு வரப்படும்.

எரிக்கப் போகிறது ஆர்பிஐ..

எரிக்கப் போகிறது ஆர்பிஐ..

இந்நிலையில் தவறுதலாக அச்சடிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை அனைத்தும் தீயிட்டு எரிக்க ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

இத்தவறுதல் குறித்து ரிசர்வ் வங்கி SPMCIL அச்சகத்தின் நிர்வாக இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI has admitted to having circulated currency notes of Rs 1,000 denomination without the 'silver thread' security feature.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X