மும்பை: அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்புத் துறையில் மதிப்புத்தக்க வளர்ச்சி ஆகியவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை வரலாறு காணாத லாபத்தை அடையச் செய்துள்ளது.
2015ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் சுமார் 7,290 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
ஒரு பேரலுக்கு 11.5 டாலர்
இந்நிறுவனத்தின் பெட்ரோலியம் பொடருட்களுக்கும் மற்றும் கச்சா எண்ணெய்யின் கொள்முதல் விலையில் உள்ள வித்தியாசம் ஒரு பேரலுக்கு 11.5 டாலராக உயர்ந்துள்ளது. இது வரலாறு காணாத அளவிலான வித்தியாசம் எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வருவாயில் குறைவு..
கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்துள்ளதால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகளும் 24 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய்
கடந்த வருடத்தின் அக்டோபர்-டிசம்பர் மாத காலகட்டத்தைப் பார்க்கும் போது கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 42.7 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி வர்த்தகத்திற்கு மிகவும் மோசமான செய்தி என்றாலும், இந்நிறுவனத்தின் பொட்ரோலியம் பொருட்களுக்கு உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கான செலவுகள் அதிகளவில் குறைந்துள்ளது.
ஜாம்நகர் உற்பத்தி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் ரிஃபைனரி தளத்தில் 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் மட்டும் சுமார் 18 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு
இந்நிறுவனத்தின் oil and gas exploration வர்த்தகத்தின் லாப அளவுகள் 89 சதவீத சரிந்து 90 கோடி ரூபாயாக உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
டிசம்பர் மாத முடிவில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்தியாவில் 371 நகரங்களில் சுமார் 3,000 கடைகளைத் திறந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 30 சதவீதம் வரை அதிகரித்து 6,042 கோடி ரூபாயாக உள்ளது.
அதேபோல் இப்பிரிவின் லாப அளவுகள் 10.5 சதவீதம் அதிகரித்து 147 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் கிளையான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுவதும் தனது 4ஜி மற்றும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கத் தயாராக உள்ள நிலையில், துவக்கத் தேதி மட்டும் ரிலையன்ஸ் குழுமம் அறிவிக்கவில்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications