மும்பை: கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்து வருகிறது, இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைக் கணிசமாகக் குறைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கி பரிமாற்றங்களுக்கான டாலர் தேவை அதிகரித்துள்ளதால் நாணய சந்தையில் டாலரின் ஆதிக்கம் அதிகரித்து இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசாவிற்கும் அதிகமாகக் குறைந்து 68 ரூபாய்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்விற்கு இந்திய சந்தை மட்டும் காரணம் இல்லை, சீன சந்தையின் வீழ்ச்சி மற்றும் ஐரோப்பிய சந்தையின் மந்தமான வர்த்தகம் மற்றும் நிதி தடுமாற்றமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் டாலரின் வீழ்ச்சி மற்றும் பங்குச்சந்தை சரிவிற்கு ஐக்கிய அரபு நாடுகளின் நிதி பற்றாக்குறையும் மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications