டெல்லி: இந்தியாவின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லையன்ஸ், டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 23.7 சதவீத உயர்வுடன் 657 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
நாட்டின் பயணிகள் விமானப் போக்குவரத்தில் நிலையான மற்றும் நம்பகத் தன்மையான சேவை அளிக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானது இண்டிகோ ஏர்லையன்ஸ்.
இந்நிறுவனத்தின் சில தள்ளுபடி மற்றும் சலுகையின் மூலம் வழக்கம் போல் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று சந்தையின் பிற நிறுவனங்களை விடவும் அதிகளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
வரலாறு காணாத லாபம்
10 வருடப் பழமையான இந்நிறுவனம் எப்போது இல்லாத வகையில் 2015ஆம் காலாண்டில் அதிகளவிலான லாபத்தைப் பெற்றுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் எந்த ஒரு இந்திய நிறுவனம் பெறாத லாபத்தை இண்டிகோ நிறுவனம் பெற்றுள்ளதால் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் தற்போது சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறது.
மொத்த வருவாய்
அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 12 சதவீதம் அதிகரித்து 4,407 கோடி ரூபாயாக உள்ளது.
லாபம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்குக் குறைந்துள்ள நிலையில் விமான நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தைப் பெறும் என்பது நாம் முன்பே கணித்தோம். அதன் படி 2015ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் வரலாறு காணாத அளவில் 23.7 வரை அதிகரித்து 657 கோடி ரூபாயாக உள்ளது.
கடன் அளவு
டிசம்பர் 31,2015ஆம் ஆண்டுக் கணக்கின் படி இண்டிகோ நிறுவனத்தின் கடன் அளவு 3,930 கோடி ரூபாயாக உள்ளது.
பங்குச்சந்தை
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 19.10 சதவீதம் வரை சரிந்து 968.75 ரூபாய் என்ற அளவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications