இனி கேஸ் சிலிண்டருக்கும் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!
டெல்லி: மத்திய பெட்ரோலியத்துறையால் சமையல் கேஸ் சிலிண்டருக்கான பணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். www.mylpg.in என்ற வலைத்தளத்தில் இவ்வசதியை பெறலாம் என்று அறிமுக நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

புதிய எரிவாயு இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை கொண்டு வருமாறு எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கேஸ் சிலிண்டருக்கு இணையதளம் வழியாக பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது அதே வழியில் பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications