ஜிடிபியை தப்பு தப்பாக கணக்கு போடக்கூடாது.. எச்சரிக்கும் ஆர்பிஐ கவர்னர்

By Veerakumar
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கீடு செய்வதற்கு சிறப்பான வழிமுறையை கையாள வேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கியில், கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ஜிடிபி வளர்ச்சியை கணக்கீடு செய்வதில் பின்பற்றப்படும் புதிய நடைமுறை குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில் ரகுராம் ராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜிடிபியை தப்பு தப்பாக கணக்கு போடக்கூடாது.. எச்சரிக்கும் ஆர்பிஐ கவர்னர்

இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் மேலும் அவர் கூறுகையில், ஜிடிபி வளர்ச்சி குறித்து பேசும்போது, அதை அளவீடு செய்யும் நடைமுறை குறித்தும், நாம் கவனம் வைத்துக்கொள்வது அவசியம் என்றார்.

மக்கள் இடம் பெயரும்போது, அதனால் மற்றொரு பிராந்தியத்தில் உற்பத்தி பெருகும். இன்னொன்றில் உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. எனவே இடம் பெயரும்போது வளர்ச்சி விகிதத்தை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், தொழிற்சாலை உற்பத்திக்கும் நடுவே வேறுபாடு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ரகுராம் ராஜனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Raghuram Rajan want relook at new GDP methodology

Raising doubts over the new GDP growth rate methodology, RBI Governor Raghuram Rajan on Thursday said there is a need for better computation of numbers so as to avoid overlaps and capture the net gains to the economy.
Story first published: Friday, January 29, 2016, 15:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X