அம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு

By Mayura Akilan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அம்மா சிறு வணிக கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 42,618 சிறு வணிகர்களுக்கு ரூ.21 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் கடன் தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடன் முகாம்கள் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக நேற்று வெளி யிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு:

 

மிகச்சிறிய முதலீட்டில் அன் றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட் களை வாங்கி விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முதலீட்டை இழந்து தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத் தவிர்க்க, ‘அம்மா' சிறு வணிக கடனுதவி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.

அம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு

இத்திட்டத்தின் கீழ், வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த தெரு வியாபாரிகள், நடைபாதை மற்றும் பெட்டிக்கடை வைத் துள்ளவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு, நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியின்றி ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

4,470 சிறப்பு முகாம்கள்

வியாபாரம் செய்யும் இடங் களுக்கு அருகிலேயே கடந்த 22-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி வரை 9 நாட்களில் 4,470 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 854 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இன்றும் (நேற்று) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

இத்திட்டம் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, அனைத்து வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் ‘அம்மா சிறு வணிக கடன் திட்ட' சிறப்பு முகாம்கள், மேலும் 3 நாட்களுக்கு அதாவது 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் வழங்கிய வர்களில் நேற்று முன்தினம் வரை 42,618 சிறு வணிகர்களுக்கு ரூ.21 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் கடன் தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jaya orders extension of 'Amma' loan scheme by three days

Buoyed by the overwhelmingresponse, Tamil Nadu Chief Minister J Jayalalithaatoday ordered extension of the 'Amma' loanscheme to flood-hit small traders, vendors and road side petty shop owners, by three days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X