டெல்லி: உலக அளவில் முதலீடு செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட இந்த நாடுகளில் முதலீடு செய்யவே சர்வதேச அளவில் வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம்.
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடாக மட்டும் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு பணம் முதலீடு செய்யப்படுகிறதாம். இது மிகப் பெரிய தொகையாகும்.
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கேற்ற சூழல், நட்புச் சூழல், நிதிவாய்ப்புகள், அரசு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை வைத்து முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிஏவி கன்சல்டிங் மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இது. கிட்டத்தட்ட 16,000 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
5வது இடத்தில் அயர்லாந்து...
இந்தப் பட்டியலி்ல அயர்லாந்து நாடு 5வது இடத்தில் உள்ளது. லக்சம்பர்க், பனாமா ஆகியவற்றைத் தாண்டி அயர்லாந்து முனன்னணியில் உள்ளது. இங்கு நிறுவனங்களுக்கான வரி மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
4வது இடத்தில் இந்தோனேசியா..
இந்தோனேசியாவுக்கு இந்த வரிசையில் 4வது இடம் கிடைத்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தோனேசியா திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்தில் வியட்நாம்..
சீனாவை விட குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்கள் கிடைப்பது வியட்நாமுக்கு சாதமான அம்சமாகியுள்ளது. அதேசமயம், வியட்நாமில் குறைந்தபட்ச கூலி தற்போது அதிகரித்துள்ளது. அதிக அளவில் இங்கு தொழிலாளர்களும் கிடைக்கின்றனர்.
2வது இடத்தில் சிங்கப்பூர்..
பலருக்கும் சொர்க்கபுரியாக திகழும் சிங்கப்பூர்தான் 2வது இடத்தில் உள்ளது. இடம், தொழிலாளர்கள், அரசுத் தரப்பு ஒத்துழைப்பு என சகலமும் இங்கு கிடைப்பதால் பலரின் விருப்ப நாடாக இது திகழ்கிறது.
முதலிடத்தில் இந்தியா..
இந்த வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் நிதிச் சீரமைப்பு, வரிச் சீரமைப்பு ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.சீனாவை விட சிறந்த முதலீட்டு விருப்ப நாடாகவும் இந்தியா திகழ்வது முக்கியமானது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications