டெல்லி: இந்தியாவில் பிபிஎஃப் மற்றும் தபால் நிலையங்களில் அளிக்கப்படும் சிறுசேமிப்பு திட்டச் சேவைகளின் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்புதிய வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் பிபிஎஃப் திட்டம், அஞ்சலக மாத சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி திட்டம், அஞ்சலகச் சேமிப்புக் கணக்குத் திட்டம், இது மட்டும் அல்லாமல் 5 ஆண்டுகளுக்குக் குறைவான முதிர்வு காலம் கொண்ட அனைத்துச் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அரசு முதலீட்டுப் பத்திர திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளதாக மத்திய திட்டமிட்டுள்ளது.
சக்திகாந்த தாஸ்
சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகித குறைப்பு குறித்த முடிவுகளின் மத்திய அரசின் அறிக்கை கூடிய விரைவில் வெளியாகும் எனப் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
காலம் மாறியது..
ஒரு காலத்தில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக மக்களின் சேமிப்பு தொகைக்கு வங்கிகளை விட அதிக வட்டி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பொருளாதாரத் தாராள மயம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது.
மோடி
இந்தச் சூழலில் சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் குறைக்க முடிவெடுத்துள்ளது மக்கள் மத்தியில் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது.
ஏப்ரல் 1 முதல்..
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும், வட்டி விகிதம் வருடாந்திர அடிப்படையில் இல்லாமல் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications