பெங்களூரு: ஸ்வீடன் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ, தனது ஐடி வர்த்தகத்தை இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ள எச்சிஎல் நிறுவனத்திற்கு முழுமையாக்க விற்பனை செய்துள்ளது.
அடுத்த 5 வருடத்திற்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 138 மில்லின் டாலர் என எச்சிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான தொகையைப் பணமாகச் செலுத்த எச்சிஎல் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த வர்த்தகப் பரிமாற்றத்தின் மூலம் எச்சிஎல் நிறுவனம் நார்டிக் மற்றும் பிரான்ஸ் பகுதியில் உள்ள வால்வோ நிறுவனத்தின் 40 வாடிக்கையாளர் மற்றும் 11 நாடுகளில் உள்ள திறன்படைத்த 2,500 ஊழியர்களைப் பெற்றுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் தற்போதைய நிலையில் வால்வோ நிறுவனம் வருடத்திற்கு 1.8 பில்லியன் டாலர் வருவாய் பெற்று வருகிறது. அடுத்த 5 வருடத்திற்கு எச்சிஎல் இக்கூடுதல் வருமானத்தைப் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் வால்வோ நிறுவனத்திற்கான ஐடி இன்ஃபராஸ்டக்சர், மெயின்பிரேம் மற்றும் அப்பிளிகேஷன் ஆப்ரேஷன் சேவைகளை இனி எச்சிஎல் நிறுவனம் வழங்க உள்ளது.

கடந்த 12 மாதத்தில் வால்வோ நிறுவனத்தின் இப்பிரிவின் மூலம் சுமார் 190 மில்லியன் டாலர் வர்த்தகத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வால்வோ நிறுவனம் தனது நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் பிற வாடிக்கையாளர்களுக்கு ஐடி சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications