மும்பை: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்துடன் சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது.
இந்நிலையில் வோடபோன் (Vodafone) நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்நிறுவனத்தின் வரி நிலுவை பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வரி நிலுவை
வோடாபோன் செலுத்த வேண்டிய ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்து வேண்டும் என்றும் இல்லையெனில் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும் என வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஹட்கிசன்
2007-ம் ஆண்டு ஹட்கிசன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 67 சதவீத பங்குகளை வோடபோன் நிறுவனம் 11 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆனால் இதை இந்தியாவில் இல்லாத ஒரு நிறுவனத்தின் மூலம் வாங்கியது, இப்பரிமாற்றத்திற்கான ரூ.14,200 கோடி வரி நிலுவையை உடனடியாகச் செலுத்த வேண்டும் என வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வோடபோன்
வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து வோடபோன் நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
வோடபோன் - வருமான வரித் துறையினர்
ஹட்கிசன் நிறுவனத்தை வாங்கிய விவகாரம் தொடர்பாக வரிநிலுவை இல்லை, காரணம் இதற்கான நடவடிக்கை இந்தியாவுக்கு வெளியே நடைபெற்றது என்று கூறுகிறது வோடபோன். ஆனால் வரிவிதிப்புத் துறையினர் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் மூலம் இந்த நடவடிக்கைகளில் வோடபோன் பெரிய ஆதாயம் ஈட்டியது என்று வாதிடுகின்றனர்.
ரூ.14,200 கோடி
வோடபோன் செலுத்த வேண்டிய வரித் தொகை ரூ.7,990 கோடி தான். ஆனால் வட்டி, அபராதம் ஆகியவை சேர்ந்து மொத்தமாக ரூ.14,200 கோடி ரூபாய் அளவிற்குத் தற்போது உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications