மும்பை: ஆசிய சந்தை வீழ்ச்சி மற்றும் இந்திய சந்தையில் நிலவும் அதிகப்படியான டாலர் தேவை ஆகியவை ரூபாய் மதிப்பை சுமார் இரண்டரை வருடச் சரிவிற்கு இன்று தள்ளியுள்ளது.
கடந்த சில மாதங்களில் சீன சந்தையின் வீழ்ச்சி துவங்கிய காலம் முதல் இந்திய சந்தையில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்திய சந்தையில் டாலர் மற்றும் பிற நாணயங்களின் இருப்பு அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கணிப்புகள்
நாணய சந்தை வல்லுநர்களின் கணிப்புகளின் படி இனி வரும் நாட்களிலும் சீனா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மந்தமாக நீடித்தால், அமெரிக்க டாலரின் ஆதிக்கம் அதிகரித்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்குக் குறையும் எனக் கூறியுள்ளனர்.
டாலர் விற்பனை
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் அமெரிக்க டாலரை 68.61 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்றைய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.57 ரூபாயில் துவங்கி தற்போது 68.62 ரூபாய் வரையில் குறைந்து வர்த்தகம் செய்யப்படுகிறது.
என்ன காரணம்
ரூபாய் மதிப்பின் தொடர் குறைவிற்கு முக்கியக் காரணம், இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீடு, மற்றும் அதிகப்படியான டாலர் தேவை ஆகியவையே இத்தகைய சூழ்நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
சர்வதேச நாணய சந்தை
அமெரிக்க டாலர் மட்டும் அல்லாமல் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. இந்திய ரூபாய் மற்றும் நாணய சந்தை குறித்து முழுமையான விபரங்களை அறிய இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications