டெல்லி: நீண்டகால முதலீட்டை அதிகளவில் பெறுவதில் கவனத்தைச் செலுத்தி வரும் மத்திய அரசு, தபால் நிலையங்களில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் வைப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை 0.25 அளவில் குறைந்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியான போது பிபிஎஃப், மாதாந்திர சேமிப்புத் திட்டம், மற்றும் இதர திட்டங்களின் வட்டியையும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தபால் நிலையங்களில் அளிக்கப்படும் திட்டத்தில் மட்டுமே கையை வைத்துள்ளது.
மாற்றம் இல்லை
தற்போது பிபிஎஃப், மாதாந்திர சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பெண் குழந்தைகள் மீதான முதலீட்டுத் திட்டம் ஆகியவற்றின் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
ஏப்ரல் 1
தற்போதைய நிலையில் தபால் நிலையத்தில் அளிக்கப்படும் 1, 2, மற்றும் 3 வருட வைப்புத் திட்டங்கள் (8.40%), கிசான் விகாஸ் பத்திர (8.70%) மற்றும் 5 வருட நீண்ட (8.40%) கால வைப்பு நிதி திட்டங்கள் அரச பத்திர முதலீட்டை விடவும் 0.25 சதவீதம் அதிகமான முதலீட்டைப் பெறுகிறது.
தற்போது மத்திய அரசின் அறிவிப்புகளின் படி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கூடுதலாகக் கிடைக்கும் 0.25 சதவீத வட்டி வருமானம் கிடைக்காது.
பிற திட்டங்கள்
அரசு பத்திர முதலீட்டை ஒப்பிடுகையில் சுகன்யா சம்ரித்தி யோஜ்னா கூடுதலாக 0.75 வட்டி வருமானம் பெறுகிறது, அதேபோல் மூத்த குடிமக்கள் 1 சதவீதம் கூடுதலாகவும், மாதாந்திர சேமிப்புத் திட்டம் 0.25 அதிகமாகவும் வட்டி வருமான பெற்று வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களின் வட்டி விகிதங்களில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
மேலும் பிபிஎஃப் திட்டத்தின் (8.7%) வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications