டெல்லி: புகையிலை மற்றும் சிகரெட் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் புகையிலை பொருட்களின் விலை மற்றும் விலைவாசி நிலைகளை ஒப்பிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், உலகச் சுகாதார அமைப்பு மற்றும் இதர மக்கள் நலக் கூட்டங்கள் இணைந்து மத்திய அரசுக்குப் புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் மீதான வரியை 40 சதவீதமாக உயர்த்தப் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்தியாவில் சிகரெட் தயாரிப்புகளின் விலையை விடவும் உணவுப் பொருட்களின் விலை குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு இணைத்து புகையிலை பொருட்கள் மீதான வரியைக் கட்டாயமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்வு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் 2014-15ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு கடுமையான வரி விதிப்பை அமலாக்கம் செய்தது.


Click it and Unblock the Notifications