மும்பை: பார்மா உலகில் மிகப்பெரிய சந்தையை வைத்துள்ள சிப்லா இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் 2 அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்களைச் சிப்லா கைப்பற்றியுள்ளது.

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் சிப்லா நிறுவனம் தனது கிளை ஐரோப்பிய கிளை நிறுவனத்தின் மூலம் இந்த இரு நிறுவனங்களையும் கைப்பற்றியுள்ளது.
கேன்சர் மற்றும் நீரிழிவு நோய்களுக்காகப் பிரத்தியேகமாக மருந்து தயாரிக்கும் இன்வாஜென் பார்மா மற்றும் எக்ஸிலென் பார்மா ஆகிய இரு நிறுவனங்களையும் சிப்லா இந்தியா நிறுவனம் தனது ஐரோப்பிய கிளையான சிப்லா (EU) லிமிடெட் நிறுவனத்தின் வாயிலாகக் கைப்பற்றியுள்ளது.

ஆண்டுக்கு 230 மில்லியன் டாலர் வருவாய் அளிக்கும் இவ்விரு நிறுவனங்களைச் சிப்லா ஐரோப்பிய கிளை 550 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
இந்நிறுவன கைப்பற்றுதல் மூலம் அடுத்த நிதியாண்டில் சிப்லா நிறுவனத்தின் வருவாய் அளவுகள் சுமார் 8 சதவீதம் வரை உயரும்.
80 வருடப் பழமையான சிப்லா நிறுவனம் மிகப்பெரிய தொகையில் கைபற்றிய நிறுவனங்கள் பட்டியலில் இன்வாஜென் பார்மா மற்றும் எக்ஸிலென் பார்மா ஆகிய இரண்டும் 2வது இடத்தைப் பிடிக்கிறது.


Click it and Unblock the Notifications