5 ஆண்டுகளுக்குப் பின் ஈரானுடன் பிஸ்னஸ் செய்யும் ரிலையன்ஸ்.. 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 5 வருடங்களுக்குப் பின் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈட்டுப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஏன் இந்த 5 வருட இடைவேளை..?

ஈரானும்.. சர்வதேச நாடுகளின் தடையும்..

ஈரானும்.. சர்வதேச நாடுகளின் தடையும்..

ஈரான் நாட்டில் அணு ஆயுதம் இருப்பதாகவும், அதனை வெளிப்படையாகத் தயாரித்து வருவதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்நாட்டின் மீது வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடையை விதித்தது. இத்தடைக்கு முக்கியக் காரணம் ஈரான் நாட்டின் அணு சக்தி திட்டத்தைத் தடுப்பது தான்.

இதனால் ஈரான் நாட்டின் முக்கிய வர்த்தகமாகக் கருதப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள 100 பில்லியன் டாலர் தொகை என அனைத்தும் முடங்கிப்போனது.

இந்நிலையில் பல வருடப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் சில கட்டுப்பாடுகளுடன் சர்வதேச நாடுகள் ஈரான் மீதான தடையை நீக்காயுள்ளது.

 

ஈரான்

ஈரான்

5 வருடமாக இழந்த வர்த்தகத்தை மீட்டு எடுக்க ஈரான் தற்போது அனைத்து வகையான வர்த்தகத்திற்குத் தயார் நிலையில் உள்ளது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனமும் தனது வர்த்தகத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..

கடந்த 2010ஆம் ஆண்டு வரை ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெய் சர்வதேச நாடுகளின் தடையால் தடைப்பட்டது.

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தேசிய ஈரானியன் ஆயில் நிறுவனத்துடன் (NIOC) கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகப் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.

 

இலக்கு

இலக்கு

இன்றைய நிலைப்பாட்டின் படி ஈரான் தான் இழந்த 5 வருட வர்த்தகத்தை மீண்டும் பெற நாள் ஒன்றுக்கு சுமார் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

முதல் நிறுவனம்

முதல் நிறுவனம்

மேலும் தடையை நீக்கத்திற்குப் பின் ஈரான் நாட்டுடன் முதன்முதலில் வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் என்பது மிக முக்கியமானது.

1 லட்சம் பேரல்

1 லட்சம் பேரல்

ரிலையன்ஸ் - NIOC நிறுவன மத்தியில் நடக்கும் பேச்சுவார்த்தையின் படி, இரு தரப்பு பழைய உடன்பாடு படியே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதாவது 2010ஆம் ஆண்டு வரை ரிலையன்ஸ், ஈரான் நாட்டு NIOC நிறுவனத்தில் இருந்து ஒரு நாளுக்கு 1,00,000-1,20,000 வரையிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. தற்போது மீண்டும் இதை உடன்பாட்டைத் தொடரவே ரிலையன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+