பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் முதல் முறையாக இந்தியாவில் 50 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் பிளேஸ்டோர் ஆப் மூலம் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்ற முதல் இந்தியா நிறுவனமாகப் பிளிப்கார்ட் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் 50 மில்லியன் வாடிக்கையாளர் என்ற இலக்கை எட்டிய பிளிப்கார்ட் தற்போது நிலையான மற்றும் முழுமையாகத் தொடர்பில் இருக்கும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் தொடர் சலுகை மூலம் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, மேலும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களில் அதிகமானோர் சமுக வலைத்தளங்களின் மூலம் வந்தவர்கள் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் செய்யப்படும் மொத்த வர்த்தகத்தில் 47 சதவீதம் மொபைல் ஆஃப் மூலம் செய்யப்படுகிறது, அதேபோல் இதன் கிளை நிறுவனமான மின்திரா நிறுவன வர்த்தகத்தில் 63 சதவீதம் மொபைல் மட்டுமே செய்யப்படுகிறது எனப் பிளிப்கார்ட் நிறுவனம் புள்ளிவிவரங்களை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications