டெல்லி: மத்திய அரசு தற்போது மூத்த குடிமக்களுக்காகச் சூப்பரான ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளது. இத்திட்டம் வருகிற 2016-17ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 கோடி ரூபாய்
இந்திய வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஈபிஎஃப்ஓ மற்றும் சிறு சேமிப்புத் திட்டங்கள் எனப் பல்வேறு நிதித்திட்டங்களில் கோரப்படாத (Unclaimed) 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த மத்திய அரசு மூத்தகுடி மக்களுக்கான சுகாதாரக் காப்பீட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
சுகாதாரத் தேவை
இன்றைய நிலையில் மூத்தகுடி மக்கள் தங்களுக்கான சுகாதாரத் தேவைக்காகத் தங்களது குடும்பத்தையும், பிறரையும் நம்பியே உள்ள நிலையில், இத்திட்டம் இவர்களுக்கு அதிகளவில் பயன் அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்சூரன்ஸ்
இந்நிலையில் இத்திட்ட துவக்கத்தில் 50,000 ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் கவர் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜேட்லி
வருகிற பிப்ரவரி 29ஆம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.


Click it and Unblock the Notifications