டெல்லி: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக வெளிவந்த ஃப்ரீடம் 251 (Freedom251) என்ற மிக மலிவான மொபைல் போன் அறிமுகத்தின் முதலே மக்கள் மத்தியில் பல விதமான கருத்துக்கள் கிளம்பின.
இதன் அறிமுகத்தின் மூலம் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைத்தாலும், இந்நிறுவன தலைவர் பல விதமான இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இவர் நிறுவனத்தின் வியாபார வியூகத்தை முழுமையாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் இந்நிறுவன தலைவர் மோஹித் கோயல்.
மொபைல் போன் யாரும் அளிக்க முடியாத 251 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், இதன் விற்பனையின் மூலம் 31 ரூபாய் லாபமும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார் மோஹித் கோயல்.
மோஹித் கோயல்
இந்நிறுவனத்தின் 'ஃப்ரீடம் 251' போன் அறிமுகமான சில நாட்களிலேயே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மீது போலீஸ் புகார்கள் மற்றும் வருமாவன வரித்துறையினரின் சோதனைகள் நடத்தப்பட்டது.
நான் மற்றும் எங்கள் நிறுவனமும் எவ்விதமான தவறுகளும் செய்யவில்லை. நாங்கள் போலீஸ் புகார்கள் என அனைத்தையும் சரியான முறையில் சந்திக்கத் தயாராக உள்ளோம் என மோஹித் கோயல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரிங்கிங் பெல்ஸ்
'ஃப்ரீடம் 251' என்ற பெயரில் மலிவான மொபைல் போன்களை வெளியிட்ட ஆஸ்தான நிறுவனம் தான் ரிங்கிங் பெல்ஸ். எங்கள் நிறுவனம் தீடிரென முளைத்துக் கிடையாது, துவக்க நிறுவனம் (Start-up) என்றாலும் சரியான முறையில் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டவை.
ஏப்ரல் 15
எங்கள் நிறுவன இணையதளத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மொபைல் போன் டெலிவரி செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் என் மீதும் எங்களது நிறுவனத்தின் மீது மோசடி குற்றங்கள், போலீஸ் புகார்கள், வருமான வரிச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. எங்களிடம் தெளிவான வர்த்தகம் மற்றும் வியாபார வியூகம் உள்ளது.
7 கோடி புக்கிங்
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி துவங்கப்பட்ட நிறுவன இணையதளத்தின் மூலம் இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் மொபைல் போன் புக்கிங் செய்துள்ளனர்.
முதல் கட்டமாக 25 லட்சம் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு, 25 லட்சம் ஆப்லைன் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளோம் என மோஹித் கோயல் தெரிவித்தார். இவை அனைத்தும் வருகிற ஜூன் 30ஆம் தேதிக்குள் டெலிவரி செய்யப்படும்.
ஐசிஐசிஐ வங்கி
இணையத் தள முன்பதிவின் மூலம் பெறப்பட்ட பணம் அனைத்தும் ஐசிஐசிஐ வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளது.
Adcom பிரச்சனை
இந்நிலையில் அசோக் சந்திரா இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் Adcom பிரச்சனை குறித்துக் கூறுகையில், ஃப்ரீடம் 251 மொபைல் போன் தயாரிப்பில் பல நிறுவனங்களின் உதிரி பாகங்கள் அடங்கியது. இந்தப் போனின் பேனல்கள் Adcom நிறுவனத்திடம் வாங்கப்பட்டது எனவே தான் அதில் Adcom நிறுவனத்தின் பெயர் உள்ளது என Adcom பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
உதிரி பாகங்கள்
ஃப்ரீடம் 251 மொபைல் போன் தயாரிப்புக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இவை அனைத்தும் நொய்டாவில் அசம்பெல் செய்யப்பட உள்ளது என மோஹித் தெரிவித்தார்.
251ரூபாய்க்கு எப்படி மொபைல் போன்..?
பொருளாதார அடிப்படையில் 2,500 மதிப்புள்ள மொபைல் போன் தற்போது 1200 ரூபாயாகக் குறைந்துள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படு பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் இதர சலுகையின் மூலம் 50 சதவீத செலவுகள் குறைகிறது.
மேலும் ஆன்லைன் மார்கெட்டிங் மற்றும் சிறப்பான விற்பனை வழிகள் மூலம் ஒரு மொபைலுக்கு 300 ரூபாய் வரை விலை குறைகிறது எனத் தனது விளக்கத்தைத் தெரிவித்தார்.
ICA-வின் கடிதம்..
ஃப்ரீடம் 251 மொபைல் போன் வெளியான சில மணி நேரங்களிலேயே Indian Cellular Association அமைப்பின் தலைவர் பங்கஜ், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு இந்நிறுவன தயாரிப்பிலும் விலை நிலையிலும் சந்தேகம் உள்ளதாகக் கடிதம் எழுதினார்.
ICA அமைப்பில் சாம்சங், ஆப்பிள், சோனி, லாவா, மைக்ரோமாக்ஸ், கார்பன் மோட்டோரோலா மற்றும் எச்டிசி ஆகியவை உறுப்பினராக உள்ளது.
பேச்சுவார்த்தை
மேலும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ஈகாமர்ஸ், டிராவல் இணையத் தளம் போன்ற பல முக்கிய நிறுவனங்களுடன் பேசி தங்களது மொபைல் ஆப்-களை ஃப்ரீடம் 251 மொபைல் போனில் இலவச செயலியாக அளிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications