சென்னை: மத்திய அரசு நாளை (பிப்ரவரி 25, 2015) வெளியிட உள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், இத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு சுமார் 20-25 சதவீதம் உயர்ந்து 1.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்திய ரயில்வே இத்துறையின் உள்கட்டுமானம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் ரயில்வே பட்ஜெட் அறிக்கை மற்றும் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அதிகப் பலன் அடையும் நிறுவனங்களைப் பார்ப்போம் வாங்க. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து கவனித்து முதலீடு செய்வோருக்கும் உதவியாக இருக்கும்.
டிட்டகார் வேகன்ஸ்
இந்தியாவில் ரயில்வே துறை உற்பத்தி சார்ந்த மிகப்பெரிய நிறுவனமான திகழும் டிட்டகார் வேகன்ஸ் (Titagarh Wagons) இந்தப் பட்ஜெட் அறிக்கையில் மிகப்பெரிய ஆர்டர்களைப் பெற உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு பணிகளின் டிட்டகார் வேகன்ஸ் மிகப்பெரிய பங்கு வகிக்க உள்ளது.
இதனால் முதலீட்டு ஏற்ற நிறுவனமாக டிட்டகார் வேகன்ஸ் கருதப்படுகிறது.
டிம்கென் (Timken)
ரயில்வே துறை சார்ந்த ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் டிம்கென் (Timken) நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுவனத்தின் BUY ரேட்டிங் சரியான நிலைக்கு வந்த நிலையில் முதலீட்டு ஏற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிலையில் 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இந்நிறுவனத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல உள்ளது.
சீமென்ஸ்
இந்நிறுவனம் ரயில்வே முதல் டர்பைன் வரை அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்குவதால் இந்திய சந்தையின் சீமென்ஸ் நிறுவனத்தின் வருவாய் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில வருடங்களில் இந்நிறுவனம் சில நிர்வாகப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்தாலும், நிலையான வளர்ச்சியைப் பெற உள்ளது.
BEML
இந்திய ரயில்வே துறை மற்றும் மெட்ரோ ரயில்வேயின் நவீனமயம் மற்றும் விரிவாக்கப் பணிகளில் BEML நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இதனால் அடுத்து சில வருடங்களுக்கு இந்நிறுவனத்தின் மீதான பங்கு முதலீடு கவர்ச்சிகரமாக இருக்கும் என முன்னணி சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டெக்ஸ்மேகோ
2017ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தில் பாதுகாப்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகப்படியான ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி டெக்ஸ்மேகோ நிறுவனத்தை முதலீட்டுக்குக் கவர்ச்சி கரமானதாக மாற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications