டெல்லி: இந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறையைப் புதுப்பிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல புதிய திட்டங்களுடன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரயில்வே கட்டண உயர்வால் பயணிகள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் 2016-17ஆம் ஆண்டுப் பட்ஜெட் கட்டணத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்துச் செய்திகளை முழுமையாவும் உடனுக்குடன் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications