மும்பை: மத்திய அரசு வியாழக்கிழமை 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை இன்று விற்பனை செய்துள்ளனர்.
புதன்கிழமை நிலவிய அதிகளவிலான பங்கு விற்பனையால் சென்செக்ஸ் குறியீடு 320 புள்ளிகள் வரை சரிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் உலோகம், சுகாதாரம் மற்றும் எஃப்சிஜி துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எட்டியது.
சென்செக்ஸ்
புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவை எட்டிய நிலையில், சென்செக்ஸ் குறியீடு 321.25 புள்ளிகள் சரிந்து 23,088.93 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 90.85 புள்ளிகள் சரிந்து 7,018.70 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிந்தது.
நிறுவனங்களின் நிலை
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் பார்தி ஏர்டெல், மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்தை எட்டிய நிலையில், பிற நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தை அடைந்தது.
இந்நிலையில், பெல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் ஆகியவை 3 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
டாலர் மதிப்பு
புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.54 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications