டெல்லி: இந்திய ரயில்வே துறையின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகப் பயணிகளுக்குப் பேப்பர் லெஸ் டிக்கெட் முறையை அளிக்கவும் இத்திடத்தை உடனடியாகச் செயல்படுத்தவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
2017ஆம் நிதியாண்டில் முதலீட்டு அளவு இரட்டிப்புச் செய்து 1.2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசும் ரயில்வே துறையும் முடிவு செய்துள்ளது.
அதேபோல் சோஷியல் மீடியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் வாயிலாகவும் பல புதுமைகளைப் புகுத்த திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை.
சோஷியல் மீடியா
இந்திய ரயில்வே துறையின் வெளிப்படைத் தன்மை மற்றும் உடனடி நடவடிக்கை மேம்படுத்தும் வகையில் சோஷியல் மீடியாவை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ரயில்வே துறை.
அதுமட்டும் அல்லாமல் ரயில்வே துறைகளின் சேவைகள் அனைத்தும் சமுகவலைத்தளம் வாயிலாகப் பெறவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
டிவிட்டர்
கடந்த சில வருடங்களாக இந்திய ரயில்வே துறைக்கு டிவிட்டர் மூலம் வரும் வாடிக்கையாளர் கோரிக்கைக்கு உடனடி பதில், உடனடி சேவை என இத்துறை கலக்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து செய்யவும் மேம்படுத்த முறையில் அனுகவும் தற்போது ரயில்வே துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
டிக்கெட்
பேப்பர் லெஸ் டிக்கெட் முறையை அனுமதிக்கத் திட்டமிடும் ரயில்வே துறை முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தங்களது பயணத்தின் நேரம், இருக்கை விபரம் எனப் பல தகவல்களை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
மேலும் டிக்கெட்டை மின்னணு முறையில் எடுத்துச் செல்லவும் ரயில்வே துறை அனுமதித்துள்ளது.
வென்டிங் மெஷின்
மேலும் இந்தியா முழுவதும் புதிதாக 1,780 தானியங்கி டிக்கெட் இயந்திரத்தை நிறுவனவும், பயணச் சீட்டை பெற மொபைல் செயலி மற்றும் கோஇந்தியா ஸ்மார்ட் கார்ட் சேவையும் பயணிகளுக்கு அளிக்க உள்ளது இந்திய ரயில்வே துறை.
அதிநவீன இயந்திரம்
ரயில்வே துறை நிறுவும் தானியங்கி டிக்கெட் இயந்திரம் நிமிடத்திற்கு 2,000 முதல் 7,200 பயணச்சீட்களை அளிக்கத் திறன்படைத்தவையாக இருக்கும் எனச் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இவை இந்திய ரயில் சேவையைத் தினசரி பயன்படுத்தும் 1,20,000 வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
மேக் இன் இந்தியா
இந்திய ரயில்வே துறைக்குத் தேவையான ரயில் பெட்டிகளைச் செய்ய மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டு தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications