டெல்லி: 2015-14ஆம் நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் வரை குறைந்ததால், நிறுவனங்கள் சரக்கு ரயில் போக்குவரத்தை விடச் சாலை வழி போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்தினர்.
இதனால் இந்திய ரயில்வே துறையின் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை வகுக்க இத்துறை முடிவு செய்துள்ளது.
கூடுதல் வருவாய்
இப்புதிய சரக்கு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 10.1 சதவீதம் கூடுதல் வருவாய் பெற உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
சுரேஷ் பிரபு
மேலும் சரக்கு போக்குவரத்து சேவை அதிகரிக்கப் புதிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெற திட்டமிட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அட்டவணை ரயில்கள்
மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் அட்டவணை வடிவிலான சரக்கு போக்குவரத்து சேவையை அளிக்க இந்திய ரயில்வே துறை முயற்சி செய்து வருவதாகச் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
8,720 கோடி ரூபாய் சேமிப்பு
மேலும் கடந்த பட்ஜெட் அறிகையில் செலவின தொகையில் 8,720 கோடி ரூபாய் பணத்தை ரயில்வே துறை சேமித்துள்ளது.
மொத்த வருவாய் கணிப்பு
2016-17ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே துறை 1,84,820 கோடி ரூபாய் மதிப்பிலான வருவாய் அளவை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications