11 மில்லியன் டாலர் சம்பளம்.. 2 வருடம் பணிக்காலம் நீட்டிப்பு.. விஷால் சிக்காவிற்கு அடித்தது ஜாக்பாட்.

பெங்களூரு: கடந்த சில காலாண்டுகளாக இன்போசிஸ் நிறுவனம் வர்த்தகத்திலும், வருமானத்திலும் மிதமிஞ்சிய செயல்பாட்டைக் காட்டி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் சீஇஓ-வான விஷால் சிக்கா.

இதனைக் கருத்தில் கொண்டு இன்போசிஸ் நிர்வாகம் விஷால் சிக்காவின் சம்பளத்தை 9.2 மில்லியன் டாலரில் இருந்து 11 மில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் சிக்காவின் பணிக்காலத்தை 2 வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

11 மில்லியன் டாலர்

11 மில்லியன் டாலர்

எஸ்.ஏ.பி நிறுவனத்தில் இருந்து வெளியேறிய விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் 2014ஆம் ஆண்டு இணைந்தார். இதனால் இந்நிறுவனத்தில் இருந்து பல முக்கிய அதிகாரிகள் வெளியேறி தங்களது எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டினர்.

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக விஷால் சிக்கா தலைமையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் விஷால் சிக்காவை பாராட்டும் வகையில் இவரது சம்பளத்தை 11 மில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது இன்போசிஸ் உயர் மட்ட நிர்வாகம்.

 

 

முழுச் சம்பள விபரம்

முழுச் சம்பள விபரம்

ஒரு வருடத்திற்கு 1 மில்லியன் டாலர் சம்பளமாகவும், 3 மில்லியன் டாலர் வேரியபில் பே, 2 மில்லியன் டாலர் மறுக்கப்பட்ட பங்குகள் மற்றும் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் எனச் சிக்காவின் சம்பளம் 11 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பணிக்காலம்

பணிக்காலம்

இதுமட்டும் அல்லாமல் இவரது பணிக்காலம் மேலும் 2 வருடம் நீட்டிக்கப்பட்டு 2021 ஆண்டு வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிடிஎஸ் டிசோசா..

சிடிஎஸ் டிசோசா..

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டிசோசா-வின் பங்குகள் மற்றும் பிற வருமானங்களைச் சேர்த்து மொத்த சம்பளம் 11.3 மில்லியன் டாலராக உள்ளது.

டிசிஎஸ் மற்றும் விப்ரோ

டிசிஎஸ் மற்றும் விப்ரோ

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனின் சம்பளம் (Take Home) 3.15 மில்லியன் டாலராக உள்ளது. அதேபோல் விப்ரோ நிறுவனத்தின் சிஈஓ டிகே குரியன் அவர்களின் சம்பளம் 1.5 மில்லியன் டாலராக உள்ளது.

இவர்கள் இருவருக்கு விஷால் சிக்காவை விடவும் அதிகளவிலான பங்குகள் மற்றும் இதர சலுகைகள் உண்டு.

 

இன்போசிஸ்

இன்போசிஸ்

இந்நிறுவன நிர்வாகம் அறிவித்தபடி விஷால் சிக்கா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் வருமான இலக்கை எட்டவில்லை என்றால் அவரது மொத்த சம்பளத்தில் 3 மில்லியன் டாலர் வரை குறைக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகக் குழு

நிர்வாகக் குழு

கடந்த சில காலாண்டுகளாக இன்போசிஸ் நிறுவனம் விஷால் சிக்கா தலைமையில் நிலையான வர்த்தகம் மற்றும் வருமானத்தைப் பெற்றுள்ளதால் இன்போசிஸ் நிர்வாகக் குழு சிக்காவின் சம்பளத்தை 11 மில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது.

இலக்கு

இலக்கு

இந்நிலையில் சிக்கா வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தைப் பெற்றுத்தர வேண்டும் என இன்போசிஸ் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதில் 16 சதவீத வருமான உயர்வு, 27 சதவீத செயலாக்கம் உயர்வு என இலக்கு கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+