பட்ஜெட் 2016: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறும் 9 தூண்கள்..!
டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை எதிர்க்கட்சிகளின் சில நிமிட அமளிக்குப்பின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் துவங்கினார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
2016ஆம் நிதியாண்டில் மத்திய அரசு 9 முக்கியத் துறைகளை மிக முக்கியமாகக் கருதி, இத்துறையின் வளர்ச்சியின் அடிப்படையின் மூலம் நாட்டின் வளர்ச்சி அளவை 8 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு மிக முக்கியமாகக் கருதப்படும் துறை மற்றும் திட்டத்தையும் இப்போதும் பார்ப்போம்.
1. விவசாயம் மற்றும் பொதுநல துறை
2. ஊரக மேம்பாட்டுத்துறை
3. சுகாதாரத் துறை
4. கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறை
5. வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முதலீடுகள்
6. கட்டுமானத்துறை
7. வர்த்தகம் செய்ய எளியமுறையை வகுத்தல்
8. நிதியியல் திட்டச் சீரமைப்பு
9. வரி மறுசீரமைப்பு


Click it and Unblock the Notifications