டெல்லி: 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சரியாக 11 மணிக்குத் தாக்கல் செய்யத் துவங்கினார்.
அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியது சில நொடிகளில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பொய்சொன்ன ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதனால் ஒருநிமிட அமளிக்குப் பின்னர் மத்திய பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்கினார் அருண் ஜேட்லி.
3 வருட சாதனை
பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் முன்னாள் அரசின் 3 வருட ஆட்சிக்காலத்தை ஒப்பிடும் வகையில் எங்களது (மோடி அரசின்) சாதனையை முதலில் பட்டியலிடுகிறேன் என்று அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பணவீக்கம்
மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் சில்லறை பணவீக்கத்தின் அளவு 5.4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
அதேபோல் அன்னிய நாடுகளின் நாணய இருப்பு அளவு அளவு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சி 7.4 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது (புதிய கணக்கீட்டு முறையின் படி). மேலும் இந்தியப் பொருளாதாரம் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் சர்வேத அமைப்புகள் பாராட்டும் நம்பிக்கை அளித்துள்ளது.
ஊழிய கமிஷன் மற்றும் OROP திட்டம்
மேலும் நாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையில் 7வது மத்திய ஊதிய கமிஷன் மற்றும் ராணுவ வீரர்ரகளுக்குப் பயன்படும் ஒன் ரேங் ஒன் பென்ஷன் திட்டங்களை மிக முக்கியமாகக் கருதி அமல்படுத்தியுள்ளோம்.
அதுமட்டும் இல்லாமல் நாட்டில் சவால்களாகக் கருதப்படும் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றியுள்ளது எங்களது அரசு.
வங்கிகள்
வரலாறு காணாத அளவிற்குப் பொதுத்துறை வங்கிகளில் நிதி உட்செலுத்தப்பட்டுள்ளது. இதனால் வங்கித்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
முக்கியத் துறைகள்
விவசாயம், ஊரக வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் சமுக நலத் திட்டங்களில் கூடுதலாக முதலீட்டுச் செய்யப்பட்டுத் தத்தம் துறைகள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
சிலிண்டர் மானியம்
எங்களது ஆட்சிக்காலத்தில் நாட்டு மக்களுக்குச் சமையல் சிலிண்டர்-கான நேரடி மானிய திட்டத்தை மிகச் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது நாங்கள் மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறோம் எனவும் ஜேட்லி தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications