அனல் பறக்கும் ஸ்மார்ட்போன் விற்பனை.. சியோமி இடத்தைப் பிடித்தது ஆப்பிள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2015ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையான சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முன்னிலை வகித்தது சியோமி.

இதனால் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் சியோமி அறிமுகமான சில மாதங்களிலேயே உலகளவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றது. ஆனால் இந்தியாவில் கதையே வேறு.

இந்திய சந்தை

இந்திய சந்தை

இந்தியாவின் டாப் 30 நகரங்களில் செய்யப்பட்ட ஆய்வில் ஸ்மார்ட்போன் விற்பனையில், சியோமி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆடம்பர சந்தை

ஆடம்பர சந்தை

இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தைக் குறைவாக இருந்தாலும், சமீபகாலத்தில் இதன் வளர்ச்சி பூதாகரமாக உள்ளது. இதன் காரணமாகத் தான் இந்தியாவில் விலை உயர்ந்த ஐபோன் கூட அதிகளவில் விற்பனை அடைகிறது.

6வது இடம்

6வது இடம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஸ்மார்ட்போனிந் அதீத விற்பனைக்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் சலுகை மற்றும் அதிரடியான ஈஎம்ஐ ஆஃப்ர்கள் தான்.

இதனால் இந்தியாவில் 2வது மற்றும் 3வது நகரங்களில் கூட ஐபோன் விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் டாப் 30 நகரங்களில் மட்டுமில்லாமல் 2வது மற்றும் 3வது தர நகரங்களில் கூட ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

விலை குறைவு

விலை குறைவு

கடந்த சில வருடங்களாக ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முக்கியத் தயாரிப்பான ஐபோனை விற்பனை செய்து வந்தாலும், ஐபோன் 6 மற்றும் 6எஸ் அறிமுகத்தின் பின் செய்யப்பட்ட திடீர் விலை குறைப்பு மக்களை அதிகளவில் ஈர்த்தது.

இதனால் மிளகாய் பஜ்ஜி கணக்காக ஐபோன் விற்பனை விற்றுத்தீர்த்தது.

 

 

மலிவு விலை ஐபோன்கள்

மலிவு விலை ஐபோன்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தை வாடிக்கையாளர்களை அதிகளவில் பிடித்த காரணத்தினால் இந்தியாவில் இனி சீப் போன் எனப்படும் 5சி போன்ற போன்கள் விற்பனை செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளது.

சந்தை

சந்தை

இந்தியா ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் சாம்சங் நிறுவனம் சுமார் 29.4 சதவீத சந்தையைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து மேக்ரோமேக்ஸ் 14.7 சதவீதம், லெனோவோ-மோட்ரோலா நிறுவனம் 10.1 சதவீத சந்தையும், இன்டெக்ஸ் 8.2 சதவீத சந்தையும், லாவா 7.1 சதவீத சந்தையும், ஆப்பிள் 4.6 சதவீத சந்தையும், சியோமி 3.5 சதவீத சந்தையும் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

ஃப்ரீடம்

ஃப்ரீடம்

இந்நிலையில் ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் ஃப்ரீடம் 251 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெறும் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கான புக்கிங் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'ஃப்ரீடம் 251' போன் விற்பனையில் 31 ரூபாய் லாபமும் உண்டு..!'ஃப்ரீடம் 251' போன் விற்பனையில் 31 ரூபாய் லாபமும் உண்டு..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Battle of smartphones: Apple edges past Xiaomi to grab No 6 spot in India's top 30 cities

Apple, which was upstaged by Xiaomi in the world's largest smartphone market China last year, has struck back in the world's fastest-growing market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X