பழைய காரை குப்பையில் போட்டால், புதிய காருக்கு 15% சலுகை.. மத்திய அரசின் 'புதிய திட்டம்'?

டெல்லி: மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை இந்திய சுற்றுச்சூழலை பாதிக்கும் 12 வருடப் பழைய கார்களின் பயன்பாட்டைக் குறைக்க தன்னார்வ வாகன நவீனமயமாக்கல் கொள்கை என்ற புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இப்புதிய திட்டத்தின் மூலம் இந்தியாவில் சுமார் 80 சதவீத மாசுப்பட்டை குறைக்கப்படும், அதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை சுமார் 30 சதவீதம் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சரி பழைய காரை எப்படிக் குப்பையில் போடுவது, எப்படிச் சலுகையைப் பெறுவது..?

திட்டம்

திட்டம்

மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை வடிவமைத்த இத்திட்டத்தின் படி, ஒரு தனிநபர் இரண்டாம் தர (pre-Bharat stage II vehicle) வாகனங்கள் அல்லது 12 வருடப் பழைய நான்கு சக்கர வாகனங்களை scrapping எனப்படும் கழிவு கிடங்குகளில் போட்டுவிட்டால் புதிய கார்களைப் பெறும் போது 15 சதவீதம் அளவிலான சலுகையை அளிக்கப்படுகிறது.

இச்சலுகையில் உற்பத்தி சலுகை மற்றும் கலால் வரி திரும்புதலும் அடங்கும். இத்திடத்தின் கீழ் பயணிகள் வாகனம் மட்டும் அல்லாலமல் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.

 

கழிவு கிடங்கு

கழிவு கிடங்கு

கார் அல்லது வர்த்தக வாகனங்களான சரக்கு ஊர்தி ஆகியவற்றைக் கழிவு கிடங்குகளில் போடும்போது, கழிவு கிடங்குகள் அதற்கான சான்றிதழ் வழங்கும்.

இந்தச் சான்றிதழை வைத்துக்கொண்டு புதிய கார் அல்லது வாகனங்களை வாங்கும்போது 15 சதவீத சலுகையைப் பெறலாம்.

 

அரசு அனுமதி

அரசு அனுமதி

மேலும் அடுத்தச் சில நாட்களில் குறிப்பிட்ட கழிவு கிடங்குகளுக்கு அரசு அனுமதி அளிக்கப்படும். இதன் பின் அரசு அனுமதி பெற்ற கிடங்குகளில் வாகனங்களைப் போட்டுவிட்டு அதற்கான சான்றிதழ் பெறலாம் எனச் சாலை மற்றும் நெடுஞ்சாலை துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட திட்டம்

இரண்டாம் கட்ட திட்டம்

இத்திட்டத்தின் விரிவாக்கமாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை இதேபோன்ற சலுகையை இரு சக்கர வாகனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

நம் நாட்டில் இரண்டாம் தர வாகனங்கள் என்று அழைக்கப்படும் 12 வருடப் பழைய நான்கு சக்கர வாகனங்கள் 40 லட்சத்திற்கு அதிகமான எண்ணிக்கையிலும், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உள்ளது.

கலால் வரி

கலால் வரி

இப்புதிய திட்டத்தின் மூலம் மக்கள் புதிய வாகனங்களை வாங்கும் போது கலால் வரியாகச் செலுத்தப்படும் தொகையில் 60 சதவீதத்தைத் திருப்பிச் செலுத்த சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை நிதியமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கூடிய விரைவில் இத்திட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

 

மாசுபாடு

மாசுபாடு

இந்திய மாசுபாடு வாரியத்தின் படி BS-V தர வாகங்களை விடவும் 10 மடங்கு அதிகமான அளவில் Pre-BS II வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபாடு செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+