இனி எல்லோருக்கும் காலாண்டு அடிப்படையிலான சம்பள உயர்வு.. 'விப்ரோ' நிறுவனத்தில் புதுமை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ, தனது பாரம்பரியமான பெல் கர்வ் முறையை விடுத்து, நிறுவன வளர்ச்சிக்கு ஊழியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் காலாண்டு அடிப்படையிலான செயல்திறன் ஆய்வை மேற்கொண்டு ஊதிய உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது.

விப்ரோ

விப்ரோ

2015ஆம் ஆண்டின் மத்தியில் விப்ரோ நிறுவனம் தனது பாரம்பரியமான பெல் கர்வ் முறையை விடுத்து ஊழியர்களுக்கு நிறுவன வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில், காலாண்டு வாரியாக ஊழியர்களின் செயல்திறன் ஆய்வின் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தைச் சோதனை முறையாகவும் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

நடைமுறை

நடைமுறை

தற்போது இத்திட்டம் முறை நடைமுறைப்படுத்த உள்ளதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஊழியர்களின் செயல்திறன் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வர்த்தகத்தை மேம்படுத்த முடியும் என விப்ரோ நம்புகிறது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

நாட்டின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதால், சந்தையில் பிற நிறுவனங்களுக்கும் இம்முறையைப் பின்பற்ற துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக

இந்தியாவில் முதல் முறையாக

இந்திய நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக மேற்கத்திய நாடுகளுக்கு இணையாகப் பல புதுமைகளைப் புகுத்து வரும் இவ்வேளையில் காலாண்டு வாரியான ஊதிய உயர்வு முறையை அமல்படுத்திய முதல் இந்திய நிறுவனம் விப்ரோ தான்

இந்தப் பக்கம் 'முகேஷ்'.. அந்தப் பக்கம் 'ஆகாஷ்'.. புதிய மாற்றத்துடன் ரிலையன்ஸ் ஜியோ..!இந்தப் பக்கம் 'முகேஷ்'.. அந்தப் பக்கம் 'ஆகாஷ்'.. புதிய மாற்றத்துடன் ரிலையன்ஸ் ஜியோ..!

 

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

இந்திய மென்பொருள் துறையில் டெக் மஹிந்திரா நிறுவனம் பெல் கர்வ் முறைக்குப் பதிலாக இந்த ஆண்டு ஸ்மார்ட் (SMART) ரேடிங் முறையை பயன்படுத்தி வந்தது, ஆனால் இந்த வருடம் எக்ஸ்சல் என்ற ரேடிங் முறையை பயன்படுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில், நிறுவனத்தின் நிதிநிலை மேம்படுத்தும் காரணமாக உயர் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கவில்லை. இதனால் பல உயர் அதிகாரிகள் தங்களுக்கான சிறந்த நிறுவனத்தைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

 

இன்போசிஸ் மற்றும் எச்சிஎல்

இன்போசிஸ் மற்றும் எச்சிஎல்

நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமாகத் திகழும் இன்போசிஸ் மற்றும் எச்சிஎல் நிறுவனங்களும் பெல் கர்வ் முறைக்கு மாற்றாகப் புதிய வகையான திட்டத்தை வகுத்து வருகின்றனர்.

இந்நிறுவனங்களின் மனிதவள பிரிவின் உயர் அதிகாரிகள் கூறுகையில், சக போட்டி நிறுவனமான விப்ரோ காலாண்டு வாரியான ஊதிய உயர்வை அளிக்கும் போது வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் எங்கள் நிறுவனம் இதேபோன்ற முறையை ஏற்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளனர்.

 

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

விப்ரோ நிறுவனத்தின் இப்புதிய முறையினால் ஊழியர்களின் வேலைப் பளு அதிகரிக்கலாம். எப்படி..?. முன் வருடத்திற்கு ஒரு முறை செயல்திறன் ஆய்வை மேற்கொண்டு சம்பள உயர்வு அளிக்கப்படும்.

தற்போதும் 3 மாதத்திற்கு ஒரு முறை செயல்திறன் ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் ஊழியர்கள் சிறப்பான ரேட்டிங் பெறக் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே 3 மாதத்திற்குள் சிறப்பான சம்பளத்தைப் பெற சிறப்பான பணிகளைச் செய்திருக்க வேண்டும்.

 

20 சதவீத ஊழியர்கள்

20 சதவீத ஊழியர்கள்

2015ஆம் ஆண்டின் சோதனை முறையில் விப்ரோ நிறுவனத்தின் சுமார் 80 சதவீத ஊழியர்களுக்குக் காலாண்டு அடிப்படையிலான செயல்திறன் ஆய்வும் செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டுத் துவக்கத்தில் மீதமுள்ள 80 சதவீத ஊழியர்களுக்கும் இப்புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.

இதனால் விப்ரோ நிறுவனத்தில் பெல் கர்வ் முறையிலான ஊதிய உயர்வை முழுமையாக நீக்கப்பட உள்ளது என இந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

புதிய முறை

புதிய முறை

விப்ரோ நிறுவனத்தின் நடைமுறை செய்யப்பட்டுள்ள காலாண்டு அடிப்படையிலான ஊதிய உயர்வு மேலாளர்களின் வெற்றி கனியாக இருக்கும். மேலும் இதனால் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro to begin quarterly appraisal system

In the middle of last year, India's third-largest software exporter Wipro rolled out an ambitious pilot exercise where it ditched its traditional 'bell curve' appraisal system for a large majority of its 170,000-odd employees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X