1,099 ரூபாயில் விமானப் பயணம்.. ஏர்ஏசியாவின் புதிய சலுகை..!

பெங்களூரு: நாட்டின் மலிவு விலை பயணிகள் விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா, புதிய வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் ஈர்க்க 1,099 ரூபாய் என்ற சலுகை விலையில் விமான டிக்கெட்டை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி மார்ச் 7-13ஆம் தேதிகளில் (பயண நாள் அக்டோபர் 1,2016 முதல் மே 22, 2017) டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1,099 ரூபாய் எனச் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது ஏர் ஏசியா.

ஏர்ஏசியா

ஏர்ஏசியா

இச்சலுகை இந்தியாவில் பெங்களூரு, விசாகப்பட்டினம், கவ்ஹாத்தி, கொச்சி, இம்பால், கோவா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களை ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனத்தின் கனக்டிங் பிளைட்களில் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளது.

கோலாலம்பூர்

கோலாலம்பூர்

அதேபோல் இச்சலுகை திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொச்சி, சென்னை அல்லது ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து கோலாலம்பூர் செல்ல ஏர்ஏசியா Berhad மூலம் வெறும் 2,999 ரூபாய் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

பாங்காக்

பாங்காக்

அதுமட்டும் அல்லாமல் பாங்காக் செல்லும் வாடிக்கையாளர் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து தாய் ஏர்ஏசியா நிறுவனத்தின் மூலம் வெறும் 3,999 என்ற கட்டண சுலுகையை அறிவித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்தியாவில் ஏர்ஏசியா நிறுவனத்தின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இல்லை இதனால் கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனம் தொடர்ந்து வர்த்தகச் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையை மாற்ற ஏர்ஏசியா இந்தியாவில் புதிய வழித்தடங்களில் விமானச் சேவையை அளிக்கத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+