பிஎப் மீதான வரி விதிப்பு வாபஸ்.. தப்பித்தது இளைஞர்கள் பட்டாளம்..

டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்த பிஎப் திட்டத்தின் மீதான வரி விதிப்புகளுக்கு நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் கருத்துக்கள் நிலவி வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று மத்திய அரசு பிஎப் திட்டத்தின் மீது விதிக்கப்பட்ட வரித் திட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்றைய இளைஞர்களுக்கு என்ன லாபம்..?

5 லட்சம் வருமானத்தில் வரிச் சலுகை..

5 லட்சம் வருமானத்தில் வரிச் சலுகை..

பட்ஜெட் அறிக்கையில் 5 லட்சம் வரை வருமானம் பெறும் தனிநபருக்கான வரி விலக்கு அளவு 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் வருடம் 5 லட்சத்திற்குச் சற்று குறைவாகச் சம்பளம் வாங்கும் பிரகாஷ் (இன்றைய இளைஞர் பட்டாளம்) மகழ்ச்சியில் திளைத்தார்.

மிகழ்ச்சியில் குண்டு விழுந்தது..

மிகழ்ச்சியில் குண்டு விழுந்தது..

இதன் பின்னான பட்ஜெட் அறிவிப்பில் பிஎப் பணத்தின் மீதான 60 சதவீத தொகையில் வரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத பிரகாஷ் மாலையில் வீடு சென்று பிஎப் மீதான வரியைக் கணக்கிட்டுப் பார்த்தபோது அதிர்ந்து போனான்.

பிரகாஷ் அதிர்ச்சி..

பிரகாஷ் அதிர்ச்சி..

பிரகாஷின் (இன்றைய இளைஞர் பட்டாளம்) அதிர்ச்சிக்கு என்ன காரணம்..? வாங்க பார்ப்போம்..

புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள பிரகாஷ் தற்போது 5 லட்சம் ரூபாய்க்குச் சற்று குறைவாக ஆண்டு வருமானம் பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 8 சதவீத ஊதிய உயர்வு பெறுவார் என்று வைத்துக்கொள்வோம்.

 

58 வயதில் ஒய்வு..

58 வயதில் ஒய்வு..

இவர் தற்போது மாதம் 4,425 ரூபாய் பிஎப் கணக்கில் வைப்புச் செய்து வரும் நிலையில், இவர் கணக்கில் இருக்கும் 40,095 ரூபாய்க்கு வரி இல்லை (ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தால்).

பிரகாஷ் தனது 58 வயதில் ஓய்வு பெறும் போது இவரது பிஎப் கணக்கில் 3.46 கோடி ரூபாய் இருக்கும். இதில் வெறும் 1.43 கோடி ரூபாய் மட்டுமே வரி விலக்குப் பெறக்கூடியது. மீதமுள்ள 2.03 கோடி ரூபாய் வருமான வரியின் கீழ் வரிக்குட்பட்டது.

 

கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

இதனால் இவர் ஒவ்வொரு மாதமும் சேமித்த தொகையில் மிகப்பெரிய பகுதி மத்திய அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். இதனால் சில வருடச் சேமிப்பை இழக்கு வேண்டிய சூழ்நிலைக்குப் பிரகாஷ் தள்ளப்படுவார்.

தப்பித்தான் பிரகாஷ்..

தப்பித்தான் பிரகாஷ்..

தற்போது இந்த வரித்திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் இனி மொத்த தொகையும் 100 சதவீத வரி விலக்குடன் பிரகாஷ் பெற்றுக்கொள்ளலாம்.

பட்ஜெட்

பட்ஜெட்

பட்ஜெட் அறிக்கையில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் விதமாக, நிதியமைச்சர் பிஎப் பணத்தைத் திரும்பப்பெறும் 60 சதவீத தொகையை, ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என்றும், இல்லையெனில் வருமான வரி சட்டத்தின் கீழ் உரியத் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார்.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இந்நிலையில் இத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ள நிலையில், பிஎப் பணத்தின் மீதான வரித் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+