டெல்லி: அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு தனது இ-பிஸ் இணையதளத்தில் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ எனப்படும் Employees' State Insuranceகளின் ரிட்டன் அறிக்கைகளை இணையம் மூலம் எளிமையாகத் தாக்கல் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இ-பிஸ் இணையதளம்
5 ஊழியர்கள் சட்ட விதிகளின் படி தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் இ-பிஸ் இணையதளத்தில் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ ரிட்டன்களைச் சமர்ப்பிக்க ரிஜிஸ்ட்ரேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
5 லேபர் சட்டங்கள்
இந்த 5 லேபர் சட்டங்களில் ஊழியர் சேமலாப நிதி மற்றும் பிற வசதிகள் சட்டம் 1952, ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் சட்டம் 1948, ஒப்பந்த தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970 மற்றும் கட்டிடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளர்கள் (வேலை மற்றும் சேவை நிபந்தனைகளும் ஒழுங்குமுறை) சட்டம் 1996 ஆகியவை அடங்கும்.
ஷராம்சுவிதா போர்டல்
கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று ஊழியர் அமைச்சகத்தின் நான்கு முக்கியத் துறைக்கான ஷராம்சுவிதா போர்டல் என்னும் இணையதளம் துவங்கப்பட்டது.
இதில் ஊழியர்கள் அடையாள எண்ணான LIN எண் ஒதுக்கீடு, வெளிப்படை சோதனை திட்டம் ஆகியவற்றுக்கான சேவை வழங்கப்படுகிறது.
பல சேவைகள்
மேலும் இ-பிஸ் மற்றும் ஷராம்சுவிதா போர்ட்டல் தளத்திலும் பல முக்கியச் சேவைகள் அடங்கும் என மத்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
அனைத்தும் இணையம்..
அடுத்த 5 முதல் 10 வருடங்களில் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அனைத்து அரசு சேவைகளும் இணையம் மூலமாகவே இயக்கும் அளவிற்கு மத்திய அரசு அனைத்து விதமான வழிவகைச் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications