டெல்லி: சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) இந்தியாவின் வாக்குரிமையை அதிகரிக்க மத்திய அரசு கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
நீண்ட காலமாகக் கிடப்பில் வைத்திருந்த இந்த ஒதுக்கீட்டுச் சீர்திருத்தத்தை ஐஎம்எப் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா ஆகிய நான்கு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் 10 பெரிய உறுப்பினர்கள் பட்டியலுக்குள் நுழையும்.
இதன் மூலம் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தனது சாதகமாக எடுக்கப்படும் முடிவுகளில் சரியான முறையில் எதிர்ப்புகள் தெரிவிக்கும் நிலையில் முக்கிய இடத்தை இந்தியா பிடிக்க உள்ளது.

ஐஎம்எப் ஒதுக்கீட்டை அதிகப் படுத்தி இருப்பதன் மூலம் மத்திய அரசு கூடுதலாக 69,575 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ள தாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தற்போது ஐஎம்எப்-ல் இந்தியாவிற்குத் தற்போது 2.34 சதவீதம் அளவிலான வாக்குரிமை உள்ள நிலையில் புதிதாக மத்திய அரசு செய்யப்பட்டும் 69,575 கோடி ரூபாய் முதலீடு மூலம் நாட்டின் வாக்குரிமை 2.44 சதவீதமாக உயரும்.


Click it and Unblock the Notifications