20 சதவீத ஊதிய உயர்வு... ஊழியர்களுக்கு ஸ்னாப்டீல் தந்த 'ஸ்வீட் சர்ப்ரைஸ்'!

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகார்மஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் 2016ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வில் ஊழியர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு 20 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளத்தை அளித்து அசத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் ஈகாமர்ஸ் துறையின் அதீத வளர்ச்சியால் நிறுவனங்களில் திறனுள்ள ஊழியர்களைப் பணியில் நிலைத்திருக்க அதிகளவிலான ஊதிய உயர்வு அளிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்னாப்டீல் அறிவித்துள்ள இந்த ஊதிய உயர்வு இத்துறையின் சக நிறுவனங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு மத்தியிலான போராட்டத்தில் ஸ்னாப்டீல் அமைதியாகக் கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் தனிப் புரட்சியைச் செய்துள்ளது.

20% ஊதிய உயர்வு

20% ஊதிய உயர்வு

ஸ்னாப்டீல் நிறுவனத்தின் டாப் பர்ஃபாமர்ஸ் எனப் பட்டியலிடப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இந்நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வை அளித்துள்ளது.

இப்புதிய சம்பளம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என ஸ்னாப்டீல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

டாப் பர்ஃபாமர்ஸ்

டாப் பர்ஃபாமர்ஸ்

இதுகுறித்து இந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் துணைத் தலைவர் சவ்ரப் நிகாம் கூறுகையில், ஸ்னாப்டீல் தகுதியடிப்படையிலான ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என முதன்மை கருத்தாக இருந்தது.

இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் நாட்டின் ஊதிய உயர்வில் டாப் பர்ஃபாமர்ஸ் எனக் கருதப்படும் ஊழியர்களுக்கு எவ்விதமான தடையுமின்றி 20 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வை அளித்துள்ளோம் எனக் கூறினார்.

 

15 சதவீத ஊழியர்கள்

15 சதவீத ஊழியர்கள்

தற்போது அறிவித்துள்ள அதிகப்படியான சம்பள உயர்வின் மூலம் நிறுவனத்தில் குறைந்தது 5-15 சதவீத உயிர்கள் பயனடைவார்கள். இதன் மூலம் நிறுவனத்தில் முக்கிய ஊழியர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்க முடியும் என ஸ்னாப்டீல் நம்புகிறது.

6,000 ஊழியர்கள்

6,000 ஊழியர்கள்

இந்நிறுவனத்தின் டெல்லி, கூர்கான் மற்றும் பெங்களூரு அலுவலகங்களில் சுமார் 6,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

2015இல்..

2015இல்..

கடந்த வருடம் ஸ்னாப்டீல் நிறுவனம் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு 15 சதவீதம் என்பதை அடிப்படையாக் கொண்ட சம்பளத்தை அளித்தது.

தற்போது கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 4 சதவீதம் அதிகமாகச் சம்பளத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஈகாமர்ஸ் நிறுனங்கள்

ஈகாமர்ஸ் நிறுனங்கள்

2015ஆம் ஆண்டில் பிளிப்கார்ட், ஓலா, ஸ்னாப்டீல் போன்ற முக்கிய ஆன்லைன் சேவை மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கவும், ஸ்திரதன்மையைக் கொண்டு வரவும், உலகின் முன்னணி நிறுவனங்களான கூகிள், மைக்ரோசாப்ட், பி அண்ட் ஜி, பார்தி ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியுள்ளது. இ

இதனால் நடப்பு நிதியாண்டில் ஆன்லைன் சேவை மற்றும் ஈகாமர்ஸ் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+