மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையை ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அடிப்படையில் வழங்க உள்ளது.
இந்திய பாதுகாப்பு துறையே சேர்ந்த 50 சதவீத வீரர்களுக்கு எஸ்பிஐ வங்கி தான் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை விநியோகம் செய்ய உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 7,75,000 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையான 1,465 கோடி ரூபாய் தொகையை அரசின் வாயிலாக எஸ்பிஐ வங்கி விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறுகையில் பிப்ரவரி 2016ஆம் மாதம் வரையில் சம்பள நிலுவை தொகையில் 25 சதவீத மட்டும் முதல் தவணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் மார்ச் 2016ஆம் முதல் அனைத்து வீரர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் கீழ் புதிய சம்பளத்தைப் பெற உள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து வங்கிகளும் கிளைகளிலும், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் விநியோகம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அருந்ததி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications