டெல்லி: ஸ்மார்ட்போன் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடலான ஐபோன் எஸ்ஈ இந்தியாவில் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இப்புதிய மாடலின் துவக்க விலை 39,000 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டும் அல்லாமல் ஆப்பிள் நிறுவனத்தின் மலிவான மொபைல் போன் என்ற பெயரையும் வாங்கியுள்ளது இந்த ஐபோன் எஸ்ஈ.
இந்நிலையில் இப்புதிய ஐபோன் எஸ்ஈ ஸ்மார்ட்போன் வாங்க நாட்டின் இளைஞர்கள் பட்டாளம் படையெடுக்கத் தயாராக உள்ளனர்.
ஐபோன் எஸ்ஈ
ஆப்பிள் நிறுவனத்தின் இப்புதிய ஐபோன் எஸ்ஈ மாடல் ஸ்மார்ட்போனில் ஏ9 சிப் கொண்டுள்ளது. சமீபத்தில் ஆப்பிள் வெளியிட்ட டாப் என்ட் ஐபோன் 6எஸ் போனிலும் இதே சிப் தான் பொருத்தப்பட்டுள்ளது.
வண்ணங்கள்
மேலும் இப்புதிய ஐபோன் தன் பிராண்டுக்கு உரிய கிரே, சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு மெட்டாலிங் பினிஷிங் கொண்ட மாடலில் வருகிறது. அதுமட்டும் அல்லாமல் 16ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட இரண்டு வகையான ஐபோன் ஈஎஸ் வகைகளை அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
டீலர்..
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இப்புதிய ஐபோன் எஸ்ஈ மாடல் போன்களை விற்க பீடெல் டெலிடெக் மற்றும் ரெட்ங்டன் ஆகிய இரு நிறுவனங்கள் ஆஸ்தான டீலர்களாக உள்ளனர்.
6,500 கிளைகள்
இவ்விரு டீலர்கள் மூலம் இந்தியாவில் மட்டும் சுமாப் 6,500 விற்பனை முனையங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்ஈ விற்பனை செய்யப்பட உள்ளது.
பீடெல் டெலிடெக்
இந்நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதலே இப்புதிய ஐபோனை ப்ரீ ஆர்டர் செய்யலாம் எனப் பீடெல் டெலிடெக் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தை
சமீப காலத்தில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது, இதனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஆடம்பர சந்தை வளர்ச்சிக்குக் குறைந்த வாய்ப்புகளை உடைய இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புதிய தொழில்நுட்பம் கொண்ட ஐபோன்களை மலிவான விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டது.
இதன் வெளிப்பாடு தான் ஐபோன் எஸ்ஈ.
ஐபோன்கள்
இந்திய சந்தையில் ஐபோன் 5எஸ் 18,000 ரூபாயாகவும், ஐபோன் 6, 6எஸ், 6எஸ் பிளஸ் போன்கள், 32,000, 40,000 மற்றும் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப தகவல்கள்
ஆப்பிள் ஐபோன் குறித்த முழுமையான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் விபரங்களை அறிய இதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications