டெல்லி: நம்முடைய வங்கி வரவு மற்றும் செலவுகளில் இருக்கும் சில்லறை பைசாக்களை முழு மதிப்பாக வங்கிகள் மாற்றி வருவது நாம் அறிந்த ஒன்று. இதனை நாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதும் இல்லை.
இப்படிச் சில்லறை பைசாக்களை முழுமையான மதிப்பாக மாற்றுவதன் மூலம் வங்கிகள் திரட்டப்படும் தொகையை ஊனமுற்றோர்களுக்கான காப்பீடு மற்றும் நிதிச்சேவை திட்டங்களின் நிதியின் கீழ் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
260 கோடி ரூபாய்
ஊனமுற்றோர்களுக்கான காப்பீடு மற்றும் நிதிச்சேவை திட்டங்களுக்கு மத்திய அரசு 260 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைச் சேர்க்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
வங்கிகள்
இத்திட்டத்திற்கு நிதி சேர்க்கும் ஒரு பகுதியாக வங்கிகள் சில்லறை பைசாக்களை முழுமையான மதிப்பாக மாற்றுவதன் மூலம் கிடைக்கும் இத்தொகையைப் பொதுத்துறை வங்கியில் வைப்பு வைத்து அதில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி வருமானத்தை இத்திட்டத்திற்காகப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்
திவ்யாங் மக்களுக்கான (ஊனமுற்றோர்கள்) நல அமைப்பு உருவாக்கப்பட்டு அவை கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அமைப்பின் கீழ் செயல்படும்.
நிதி திரட்டல்
இந்த நல அமைப்பிற்கான நிதி தேவையை நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரட்டப்படும் வகையில் கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அமைப்பிற்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது.
சுகாதாரக் காப்பீடு
ஊனமுற்றோர்களுக்கான குடும்பக் காப்பீட்டுத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்யும் வகையில் மத்திய அரசு கடந்த வருடம் காந்தி ஜெயந்தி நாள் அன்று பிறந்த குழந்தை முதல் 65 வயதுடைய அனைத்து ஊனமுற்றோர்களின் குடும்பத்திற்கு வருடம் 2 லட்சம் வரையிலான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை Swavlambam சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு வெளியிட்டது.
முன்பு இத்திட்டம் 18-65 வயதுடையவர்களுக்கு மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
2 லட்சம் ரூபாய் காப்பீடு
இத்திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர், அவரது மனைவி/கணவன் மற்றும் 2 குழந்தைகளுக்கு வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத் திறனாளி வெறும் 10 சதவீதம் செலவை மட்டும் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும், மீதமுள்ள தொகை அரசு ஏற்கும்.
திவ்யாங் நலச் சங்கத்தின் உதவித்தொகை
மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்படும் இந்த நலச் சங்கத்தில் மாணவர்கள் தங்களது மேல்நிலை அல்லது பட்டப்படிப்பில் 50 சதவீத மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றால்
1. பராமரிப்புப் படியாக மாதம் 2,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை அளிக்கப்படும்.
2. புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களுக்காக வருடத்திற்கு 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
3. மடிக்கணினி அல்லது கணினி அல்லது பிரைலி அல்லது காது கேளாதோருக்கான உபகரணங்களை வாங்க 40,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.
பெண்கள் இச்சலுகையைப் பெற 45 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications