டெல்லி: வருகிற ஜூலை மாதத்தின் மத்தியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் 700 மெகாஹெட்ஸ் பேன்ட் உட்படப் பல அலைவரிசைகளின் கீழ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை டெலிகாம் நிறுவனங்களுக்கான பயன்பாட்டிற்கு ஏலம் விடத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசு சுமார் 5.36 லட்சம் கோடி ரூபாய் வரையிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
மார்ச் 28ஆம் தேதி (இன்று) நடந்த தொலைத்தொடர்பு கமிஷன் கூட்டத்தின் ஆலோசனைக்குப் பின், இத்துறையின் பரிந்துரை பெயரில் ஸ்பெக்ட்ரம் ஏல விலை மற்றும் ஏலம் நாள் நிர்ணயம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே மாத மத்தியில் அல்லது ஜூன் மாதத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பரிந்துரையை ஏற்க இத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நடக்கும் பட்சத்தில் ஜூலை 15ஆம் தேதி ஏலம் நடத்தப்படும் எனத் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
2.54 லட்சம் கோடி
2014-15ஆம் நிதியாண்டில் டெலிகாம் சேவை அளிக்கும் நிறுவனங்கள் 2.54 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விலை கணிப்புகள்
இந்நிலையில் டிராய் அமைப்பு 700 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைக்கு 11,485 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச விலையைத் தொலைத்தொடர்பு துறைக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதனால் ஜூலை மாதம் நடக்க உள்ள ஏலத்தில் ஸ்பெக்டரம் விலை நிலவரங்கள் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படிகிறது.
4 லட்சம் கோடி..
டிராய் அமைப்பின் பரிந்துரையின் படி அலைக்கற்றை விற்பனை செய்தால் ஏலம் இல்லாமல் மத்திய அரசு 4 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புதிய உச்சம்
ஜூலை மாதம் நடக்க உள்ள ஏலத்தில் அலைக்கற்றைகளின் விலை புதிய உச்சத்தை எட்டப்படும் நிலையில், வாடிக்கையாளர்களின் (மக்களின்) மொபைல் கட்டணம் 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
டிராய்
மேலும் ஏலத்திற்கு முன்பு டிராய் அமைப்பு டெலிகாம் நிறுவனங்களிடம் சில முக்கிய விளக்கங்களைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications