100 பில்லியன் டாலர் மதிப்புள்ள டீல்கள்.. புதுப்பிக்கும் வேலையில் இன்போசிஸ், டிசிஎஸ் மும்முரம்!

பெங்களூரு: இந்திய மென்பொருள் நிறுவனங்கள் 2016-17ஆம் ஆண்டுக்கான 100 பில்லியன் டாலர் மதிப்பிலான பன்னாட்டு நிறுவனங்களுடனான மென்பொருள் கட்டுமானம், தொழில்நுட்ப உதவில் எனப் பல்வேறு ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கும் பணியில் மூழ்கியுள்ளது.

இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது..? ஆனால் சிக்கல் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் பேஸ்புக் இணைப்பு..!

குப்பன் சுப்பன்

குப்பன் சுப்பன்

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் குப்பன் சுப்பன் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை. டச்சீஸ் வங்கி, யுபிஎஸ், மிட்சுபிஷி, வோடாபோன் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுடன் பல பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களில் பணியாற்றி வருகிறது.

வேலைவாய்ப்பு இழப்பு

வேலைவாய்ப்பு இழப்பு

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்களின் சேவை பிடிக்கவில்லை என்றால் டீலை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால் இந்நிறுவனங்களில் வருவாய் இழப்பு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க வாடிக்கையாளர்களுடன் டீலை ரீனிவல் செய்யும் பணியில் இந்திய ஐடி நிறுவனங்கள் மூழ்கியுள்ளது.

 

2016-17ஆம் ஆண்டு..

2016-17ஆம் ஆண்டு..

இந்நிலையில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின் முக்கிய வாடிக்கையாளர்களான ஜேபி மோர்கன் சேஸ், லோவீஸ், அஸ்தராஜெனிகா, டச்சீஸ் வங்கி, யுபிஎஸ், மிட்சுபிஷி, வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களும் இதில் நடப்பு நிதியாண்டுக்கான ரினீவல் பணியில் இறங்க உள்ளது.

பிற முக்கிய நிறுவனங்கள்

பிற முக்கிய நிறுவனங்கள்

இங்கிலாந்து நேஷ்னஸ் கிரின்ட், ஐரோப்பா நெட்வொர்க் ரயில், போன்ற முக்கிய நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்ட ஐபிஎம், சிஎஸ்சி, ஹிடாச்சி மற்றும் காரிலியான் போன்ற முன்னணி நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்பட உள்ளது.

பில்லியன் டாலர் டீல்

பில்லியன் டாலர் டீல்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்களில் பில்லியன் டாலர் மதிப்பிலான டீல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை இந்திய சந்தை மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

விலை மதிப்பீடு

விலை மதிப்பீடு

இந்திய சந்தையில் டிசிஎஸ், காக்னிசென்ட் மற்றும் இன்போசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டியின் காரணமாகப் புதிய ஒப்பந்தங்களின் மீதான விலை மதிப்பீடு தாறுமாறாக உள்ளது.

இப்பிரச்சனை நடப்பு நிதியாண்டிலும் நீடிக்கும் எனத் தெரிகிறது. இந்த விலை போட்டியால் நிறுவனங்கள் குறைந்த அளவிலான தொகைக்கு டீல்களைக் கைப்பற்ற வேண்டிய நிலை உள்ளது.

 

இந்திய ஐடி நிறுவனங்கள்

இந்திய ஐடி நிறுவனங்கள்

ஊதிய உயர்வு, வர்த்தகப் போட்டி, நிறுவன வளர்ச்சி, டாலர் மதிப்பீடு எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் இந்திய ஐடி நிறுவனங்கள், மேக் இன் இந்தியா, புதிய நிறுவனக கைப்பற்றுதல் மூலம் விரிவாக்கம் எனப் பல பிரிவுகளில் வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது.

சரி, நடப்பு நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் எப்படி இருக்கும் என்பதன் பார்வை மற்றும் கருத்துகளைப் பகிரவும்.

மோடியின் வோல்டு டூர்..

மோடியின் வோல்டு டூர்..

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+